
கொழும்பு : பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை, என இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபயா தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்த போது பாகிஸ்தான் கணிசமான ஆயுத உதவி அளித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இலங்கையில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டார். இது குறித்து இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா குறிப்பிடுகையில், " சர்தாரி வருகையின் போது பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளுடன் நடந்த சண்டையின் போதும் எல்லா நாடுகளிடம் பெற்ற ஆயுத உதவி போல, பாகிஸ்தானிடமும் ஆயுத உதவி பெறப்பட்டது. மற்றபடி அந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இலங்கை ராணுவத்தில் இரண்டு லட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம் மற்றும் அதி நவீன கருவிகளுக்காக பட்ஜெட்டில், 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று கோத்த பயா கூறினார்.
1 comment:
ஆமா!சர்தாரி நேரம் போகாம டீ குடிக்க இலங்கை போயிட்டு வர்றாரு.
Post a Comment