வாஷிங்டன், நவ. 4: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை அனைத்து விதத்திலும் தலைநிமிரச் செய்யப்போவதாக அந்த மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கி தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நிக்கி ஹேலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். வெற்றி பெற்ற பின் ஹேலி,தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விட முடியாது. ஆனால் ஒரு மனிதனுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவனை தலை நிமிரச் செய்ய முடியும். அதற்கான முயற்சிகளை செய்வோம். இனி நாங்கள் தெற்கு கரோலினா மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். மக்களின் துணையுடன் தெற்கு கரோலினா மாகாணத்தை தலை நிமிரச் செய்வோம்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment