வாஷிங்டன், செப்.10: இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டிருந்த ஃபுளோரிடா நகர பாதிரியார், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் உள்ள சிறிய சர்ச் ஒன்றின் பாதிரியாரான டெர்ரி ஜோன்ஸ், செப்டம்பர் 11 தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியுயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடம் இருந்த இடத்துக்கு அருகில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இஸ்லாமிய மையத்தையும், மசூதியையும் வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதால் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்தார். எனினும் மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுவதை அந்த இஸ்லாமிய மையம் உடனடியாக மறுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment