Sep 3, 2010

உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.


அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியானது தடை செய்யப்பட சிமி என்ற இயக்கத்தின் மறுபதிப்புதான் பாப்புலர் பிரண்ட் என்றும் கோவை, மதுரை, நாகை, திண்டுக்கல் ஆகிய ஏரியாக்களில் இவர்களால் மதப்பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .

பாப்புலர் பிரண்டிற்கும் சிமி என்ற இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை, மேலும் மதப்பிரச்சினை ஏற்ப்பட வாய்ப்பு என்கின்றார். மதப்பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நச்சு எண்ணம் பாப்புலர் பிரண்டின் சித்தாந்தந்திலோ, செயல்பாட்டிலோ இல்லாத ஒன்று என்பதற்கு தமிழகத்தில் மனித நீதி பாசறை யாகவும் தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவாகவும் செயல்பட்டு வரும் கடந்த 11 வருட கால செயல்பாடுகளே சாட்சியாக இருக்கின்றது .

மேலும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுமார் 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது . தமிழக உளவுத்துறை ஒரு கண்ணை கொண்டு மட்டுமில்லாமல் மொத்த கண்களை கொண்டும் பாப்புலர் பிரண்டை பார்த்தாகி விட்டது. இதற்கு மேலும் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முஸ்லிம் சமூகத்தை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு சமூக இயக்கம் என்பதை தவிர வேறொன்றுமில்லை

எனவே மக்கள் பேரியக்கமான பாப்புலர் பிரண்டின் கண்ணியத்தை சீரழிக்கும் வகையில் உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட் அவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாற்றமானது , அடிப்படை ஆதாரமில்லாதது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீதிக்காக பாப்புலர் பிரண்டின் போராட்டம் தொடரும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

இப்படிக்கு:மு முஹம்மது அலி ஜின்னா- மாநில தலைவர்- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.

No comments: