புதுடெல்லி:நானூற்று ஐம்பது ஆண்டுகள் நிமிர்ந்து நின்ற பாபரி மஸ்ஜித் 1992 டிசம்பர் ஆறு அன்று சங்கபரிவார குண்டர்களால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பள்ளி மட்டும் அல்ல தேசத்தின் ஒட்டுமொத்த நடுநிலையாளர்களின் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அன்றைய உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பொழுது வாய்மூடி மெளனமாக நின்று வேடிக்கை பார்த்த பொழுது அன்றைய பாரத பிரதமராக வீற்றிருந்தார்.
மசூதியை தகர்த்த காவி குண்டர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் அங்கு மீண்டும் மசூதி எழுப்பப்படும் என்றும் வாக்குறுதி வழங்கினார் பி.வி.நரசிம்மராவ். 1993ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பை தொடர்ந்து பம்பாய் நகரில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கயவர்களின் பங்களிப்பும் சிவசேனாவின் வன்முறை வெறியாட்டமும் பட்டவர்த்தமான உண்மையாகும். அப்பாவி இந்துக்களிடயே, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடையே ராமர் கோவில் சம்பந்தமாக தனது இட்டுக் கட்டிய கதைகளை, கற்பனைகளை உண்மை சம்பவம் போல் பரப்புவதற்காக 1990-ல் விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ராமஜென்ம பூமி இயக்கம் என்ற பெயரில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும் செயலில் ஈடுபட்டது.
இந்த இயக்கத்திற்கு புத்துணர்வையும், புதிய வடிவத்தையும் அளிக்கவேண்டும் என இந்து சாதுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் பல்வேறு வர்ணாசிரம கொள்கையாளர்கள் தமது ஆதரவையும் அங்கீகாரத்தையும் ஹரித்துவாரில் நடைபெற்ற மகாகும்பமேளவில் வழங்கினர். முன்பு போல் இப்பொழுதும் இதனை செயல்படுத்தும் பணியை வி.ஹெச்.பி ஏற்றுள்ளது. அதன் அடிபடையில் ஆகஸ்ட் 16 முதல் நாடு முழுவதும் ராமஜென்ம பூமி இயக்க பிரச்சாரங்களையும் பொதுகூட்டங்களையும் வி.ஹெச்.பி நடத்தும். பிரசாந்த் ஹுர்த்லாகர் என்ற வி.ஹெச்.பி காரியதரிசி அளித்துள்ள பேட்டியில் "ராமஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஹனுமான் சலிசா நடத்தப்படும், கடந்த காலங்களில் ராமர் கோவில் சம்பந்தமாக என்ன நடைபெற்றது என்று விரிவாக இளைஞர்களுக்கு விளக்கப்படும்" என கூறியுள்ளார்.
இந்த ராமஜென்ம பூமி இயக்கத்தின் புதிய பிரசாரம் முன்பை போன்று கரசேவையில் ஈடுபடுவதாகவோ கோவில் கட்ட நிதி திரட்டுவதாகவோ அமையாது மாறாக மறந்து விட்ட ராமஜென்ம பூமி பிரச்சனையை மீண்டும் துண்டு பிரச்சாரம் வெளியிடுவதின் மூலமாக இந்துக்களிடயே எழுச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக அமையும். இம்முறை பெரும்பாலான பிரச்சாரங்கள் கோவில்களை சுற்றியும் இளைஞர்களை சுற்றியும் மட்டுமே அமையும் 1990-ல் தொடங்கப்பட்டது வி.ஹெச்.பியின் ராமஜென்ம பூமி இயக்கம். இப்பொழுது மீண்டும் தொடங்கப்படும் இந்த இயக்கமானது கடந்த இருபது ஆண்டுகளாக வெளிப்படையான எந்த செயலையும் செய்யாது அடக்கி வாசித்தது.
1990 க்கு பிறகு தொடர்ந்து பல கலவரங்களையும் அண்மைகாலமாக ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டு இருக்கும் மறைக்கப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்புகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தி, தொலைத்துவிட்ட தனது மத அடையாள முகத்தை மீண்டும் அடைவதற்கு அணைந்துவிட்ட அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்து அரசியல், மத, பொருளாதார, மீடியா பயனை அடைவதற்கு கரசேவ கயவர்கள், தேச விரோதிகள், சங்கபரிவார குண்டர்கள் ராமஜென்ம பூமியை மீண்டும் கையில் எடுப்பது இந்திய தேசத்திற்கும் தேச மக்களுக்கும் மதசார்பின்மைக்கும் ஆபத்தாகும். ஏற்கனவே முதுகில் குத்திய காங்கிரஸ். மூன்று முறை தடை செய்த இயக்கத்தை மீண்டும் தடை செய்வதற்கும் தனது நம்பகத்தன்மை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் இது ஒரு நல்ல சந்தர்பம் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment