Feb 7, 2017

வீரத்தின் மறுபெயர் ஜல்லிக்கட்டு போராட்டம்!

பொங்கலுக்கு முன்பாக 8 ஜன 2017 அன்று, மெரினாவில் நடத்திய அடையாள ஊர்வலமே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான இந்த ஆண்டு தொடக்கமாக அமைந்தது. அடுத்து 13 ஜன 2017 அன்று, மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் சமூக வலைப்பின்னலில் உள்ள மாணவர்கள் + இளைஞர்களால் நடத்தப்பட்டதே இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். பின்னர் இந்த போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து போராட்டம் வலுப்பெற்றது.
கேம்பஸ் பிரன்ட் ஒப் இந்தியா என்கிற மாணவர் அமைப்பு, மே 17 இயக்கம், ம.க.இ.க., நாம்தமிழர் கட்சி, மற்றும் தமிழ் உணர்வாளர்கள், சிந்தனையாளர்கள் இவர்களால் மேலும் இந்த போராட்டம் வலுப்பெற்றது. காவிரி நதிநீர் பிரச்சனை, இயற்க்கை வள கொள்ளை, கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, மத்திய அரசின் ருபாய் நோட்டு தடை, கூடங்குளம் அணுஉலை, மீத்தேன் திட்டம்,  நியூட்றினா திட்டம், தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தொடர் அச்சுறுத்தல், விவசாயிகள் தற்கொலை என்று மத்தியில் ஆளும் பாசிச ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் பினாமி அரசியல் கட்சி பாரதிய ஜனதாவால் தமிழக மக்கள்பட்ட துன்பம் ஜல்லி கட்டு என்கிற ஒற்றை புள்ளியில் அறப்போராட்டமாக வலுப்பெற்றது. 
jallikattu marina beach protest
"நாட்டு மாடு, நாட்டு நாய்க்கு எதிராக (PETA) பீட்டாவின் நடவடிக்கைகள், அதற்க்கு ஆதரவாக ஆளும் பாரதிய ஜனதாவின் பாசிச ஹிந்துத்துவா முகம் இவற்றை தமிழக மக்கள் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது. ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்தே வந்துள்ளது. தமிழக பாரதிய ஜனதாவினரின் இரட்டை முகம், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.சுப்பிரமணிய சாமி தமிழர்களை பலமுறை பொருக்கி என்று அழைத்ததற்கு பாரதிய ஜனதா கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் இன்றி கண்டனம் கூட தெரிவிக்காதது, இது குறித்து ஊடகங்கள் வாய் திறக்காமல் தொடர் மவுனம் காத்து வந்தது, நியூஸ் 7 தொலைக்காட்சி தவிர மற்றைய தொலைக்காட்சிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெகு தாமதமாகவே கண்டு கொண்டது, குறிப்பாக தந்தி டிவி அறிவிக்கப்படாத பாசிச பிஜேபி கட்சியின் டிவியாகவே செயல்பட்டது இப்படியாக தமிழர்கள் தங்களது எதிரிகளை எதிர்கொண்ட சிறப்பு களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.
தன்னெழுச்சியாக தொடங்கப்பட்ட மாணவர் போராட்டம் பல லட்சம் மக்களோடு சிறப்பான முறையில் அறவழியில் நடந்தேறி கொண்டிருந்தது. இந்திய வரலாறு காணாத வகையில் இதுபோல் ஒரு அறவழி போராட்டம் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்கிற அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது. உலகமே தமிழர்களை தலை திரும்பி பார்த்தது. இதனால் மத்திய பாசிச பாரதிய ஜனதாவும், அதன் தமிழக அடிமை அதிமுக ஆட்சியும் தமிழர்கள் வீர வரலாற்று பெருமை மிக்க போராட்டத்தின் முன் மண்டியிட்டது. தமிழர்கள் வென்றார்கள் தமிழர்களின் இந்த அறவழி போராட்டத்தின் வெற்றியை முழுவதுமாக கொண்டாட விடாத ஹிந்துத்துவா பாசிச வெறியர்கள் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைந்தனர். அதன்படி ஹிப்பாப் தமிழன், ஏனாதி ராஜ, நடிகர் லாரன்ஸ் போன்றோர் மிரட்டப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தை களங்கம் ஏற்படுத்த ஆளும் பாசிச அரசால் திட்டம் தீட்டப்பட்டது. அதன் காரணமாக இவர்கள் போராட்ட களத்தில் இருந்து விலகி கொண்டார்கள். பாசிச அரசின் ஏவல் நாய்கள் போராட்டகாரர்கள் மீது ஏவி விடப்பட்டார்கள்.  நாங்கள் போலீஸ் இல்லை பொறுக்கிகள், பாசிச அரசுகளின் ஏவல் நாய்கள் என்பதை தமிழக காவல் துறை திறம்பட நிரூபித்து காட்டியது. பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், என்று எல்லோரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்து படுகாயப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், வீடுகள், மீன் மார்க்கட் என்று அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். உலகிலேயே பொதுமக்கள் சொத்துக்களை தீவைத்து கொளுத்தும் "தீ" விரவாதா போலீஸ் முகத்தை உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி செனல்கள் ஒளிபரப்பி இவர்களின் உண்மை முகத்தை உலகறிய செய்தன. 
இந்த போராட்டம் தொடர்ந்திருந்தால்  மத்திய மற்றும் தமிழக கொடுங்கோல் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். அந்த பொன்னான காரியம் நடந்து விடாமல் திட்டமிட்டு காவல் நாய்களால் தடுக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை. இந்த போராட்ட்டம் ஒரு புதிய விழிப்புணர்வின், ஒன்று கூடலின், ஒற்றுமையின், சமத்துவத்தின் ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம். இந்த போராட்டம்  தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடும் என்பது நிச்சயம். தமிழர்களின் வீரத்தை, விவேகத்தை பறை சாற்றுவதாக இந்த ஜல்லி கட்டு போராட்டம் அமைந்தது. தமிழர்களின் வீரத்தின் மறுபெயர் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றால் மிகையாகாது. 

No comments: