பிப்/8/2017 இன்றய பரபரப்பு தமிழக அரசியலில் “பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, அதை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா ?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு நேரம் கொடுக்கப்படுமா? அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?” இதுதான் முக்கிய விவாத பொருள்.
ஏதோ பன்னீருக்கு திடீர் வீரம் வந்துவிட்டதை போலவும், இதுநாள்வரை தூங்கி கொண்டிருந்த மனசாட்சி திடீர் என்று விழித்து கொண்டது போலவும் அதனால்தான் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஒரு திரிகோண வடிவ அரசியல், இதில் பன்னீர் செல்வம் + பிஜேபி ஹிந்துத்துவா மதவாத கும்பல் + கட்டுமரம் கருணாநிதி கும்பல் என்று இது முக்கோணத்தில் முடிகிறது.
பன்னீர் செல்வத்தை ஆட்டி வைப்பதின் பின்னணியில் பிஜேபி ஹிந்துத்துவா செயல்படுகிறது என்பது தெளிவான உண்மை. தமிழக முதல்வரின் ராஜினாமா குறித்து பிஜேபி H . ராஜா குறிப்பிடுகையில் நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்யவைத்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். பிஜேபியின் மாநில தலைவர் தமிழ் இசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் ஒரு உப்பு சப்பு இல்லாத பத்திரிக்கை பேட்டி அளித்துள்ளார். இதில் சசிகலா அல்லது பன்னீர் செல்வம் யார்க்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த குதிரையில் ஏறிக்கொள்ள வசதியா அந்த பேட்டி அமைந்துள்ளது. பிஜேபி சுப்பிரமணிய சுவாமி பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு விடயத்தில் அரசியல் நடத்தியது போல் இரட்டை நாக்கில் பேசி கபட நாடகம் நடத்துகிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. கோமாளி மோடியின் ஆட்சியில் மக்கள்படும் துயரங்களை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
அதேநேரம் சசிகலாவின் வழக்குகளை தூசிதட்டி அவருக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து பணியவைக்க முயலுகிறது. மொத்தத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்ய துடிக்கிறது. அரசியல் நேர்மையற்ற பிஜேபி வடமாநிலங்களில் செய்த அதே நரித்தனத்தை தமிழகத்தில் அரங்கேற்றபார்க்கிறது. மொத்தத்தில் தமிழக அரசியலை கபளீகரம் செய்ய RSS சங்கபரிவார் துடிக்கிறது.
No comments:
Post a Comment