புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க மத்தியை ஆளும் பாசிச மதவாத பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து அப்பகுதி பொது மக்களின் போராட்டம் துவங்கியிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக வரும் 26-ஆம் தேதி அன்று புதுக்கோட்டையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இப்படி பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அந்த திட்டம் குறித்தும், அதன் பின்னணி பற்றியும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
ஹைட்ரோகார்பன் என்பது ஹட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த ஒரு கனிம கலவையாகும். மீத்தேன் வகை வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு. எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு ‘திடீர்’ என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பது உண்டு.
திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள் முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்திய அரசு பயங்கரவாதம்:
குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு எடுக்கக்கூடாது என்ற விதிகள் இல்லையென்றாலும், கடலோர, மக்கள் வாழாத இடங்களில் இம்முயற்சியை செய்யலாம், மாற்று வழியாக இதே மீத்தேனை சாண எரிவாயு மூலம் எடுப்பதை ஊக்குவிக்கலாம். தமிழகத்திற்கு பெரிதும் உதவக் கூடிய AIIMS மருத்துவ கல்லூரி அமைப்பது போன்ற விசயங்களில் மெத்தனம் காட்டி விட்டு, மக்கள் விருப்பமில்லாத இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துவது என்பது இந்திய (ஹிந்திய) அரச பயங்கரவாதத்தின் ஒருபகுதியாகவே பார்க்க முடிகிறது. மக்கள் விரோத, தமிழர் விரோத இந்த பாசிச அரசுகளுக்கு எதிராக மாணவர்கள், பொது மக்கள் அணிதிரள வேண்டும்.
No comments:
Post a Comment