Oct 21, 2013

இந்தியாவுக்கு அமெரிக்கா உறவா ரஷ்யா உறவா?

Oct 21/2013: மாஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான கல்வி நிறுவனம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

3 நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கை கல்வி நிறுவனம் கவுரவித்து இந்த பட்டத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டத்தை பெறும் முதல் இந்தியர் என்ற பெறுமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

விழாவில் ஏற்பை வழங்கிய மன்மோகன் சிங் ரஷ்ய மக்களும், அரசும் இந்தியா மீது கொண்டுள்ள நல்லெ ண்ணத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் ஆதரவு கரம் நீட்டுவது ரஷ்யாதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்தார்.

ரஷ்யாவைத் தவிர மிகச்சிறந்த நட்பு நாடு இந்தியாவுக்கு வேறு எதுவும் இல் லை என்றும் மன்மோகன் சிங் கூறினார். எக்காரணம் கொண்டும் இரு தரப்பில் உள்ள நட்புறவில் விரிசல் ஏற்பட இரு நாடுகளும் அனுமதிக்காது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபட தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்தியாவுக்கு அமெரிக்கா உறவா ரஷ்யா உறவா? இரண்டு பேருடனும் ஒரே நேரத்தில் உறவு வைத்து கொள்ள முடியாது என்பது இந்த பொருளாதார புலிக்கு தெரியாதா என்ன? ரசம் வைக்கும் இந்த சாதா புளிக்கு ரஷ்யாவில் டாக்டர் பட்டம் கொடுத்ததும் அதற்க்கு இவர் இப்படி பேசி இருப்பதும் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு பிடிக்காது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்த புலிக்கு ஆப்பு தாண்டி.

No comments: