Oct 19, 2013

மக்கள் கேள்வி கேட்கும் துணிச்சலைப் பெற வேண்டும்!

Oct,20/2013: தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பினாயக் சென் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். 

மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யா பீடத்தில் பினாயக் சென் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டீஷ்கர் நீதிமன்றம் என் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி ஆயுள் தண்டனை விதித்தது.

தற்போது உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் நான் வெளியே உள்ளேன். ஒரு மனித உரிமை ஆர்வலர் செய்ய வேண்டிய பணியை மட்டுமே நான் செய்தேன். சல்வாஜுதும் என்ற மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படை நடத்திய தீவிரவாதச் செயல்களை வெளிச்சம் போட்டு காட்ட நான் முயற்சித்தேன். இன்றைய சூழலில் அனைத்து மக்களும் கேள்வி கேட்கும் துணிச்சலைப் பெற வேண்டும். 

அணு சக்தியை நான் எதிர்க்கிறேன். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவுவது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் மீது அரசு அநியாயமாக குற்றங்களை சுமத்துகிறது. இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும். தேசத்தின் வளங்கள் முதலாளித்துவ சக்திகளுக்கு வழங்கப்படுகின்றன.இந்தியாவில் பணக்காரனுக்கும், ஏழைக்கும் இடையேயான இடைவெளி தீவிரமடைவதே மக்கள் மாவோயிஸ்ட் போன்ற இயக்கங்களில் சேர்வதற்குக் காரணமாக அமைகின்றது.
*யாழினி*

No comments: