Feb 11, 2013

அரசு பயங்கரவாதத்திற்கு பலியான அப்சல் குரு!

பிப் 12/2013: இந்திய நாடாளு மன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குருவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட வில்லை. குற்றம் நிரூபிக்கபடாத ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் இந்திய நீதிமன்றங்கள் அரசு பயங்கரவாதத்தின் கூட்டாளிகள் ஆகியது.

ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அரசியல் பயங்கரவாதத்திற்கு நீதிமன்றங்கள் எல்லா வகைகளிலும் துணை நிற்கின்றன. நீதிமன்றங்கள் நடுநிலையோடு நீதி செலுத்துவதற்கு பதிலாக அரசு பயங்கரவாததிற்கு காவடி தூக்குகின்றன.

உயர் நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்கள் தாங்களின் இருப்பை காட்டி கொள்வதற்காக அவ்வப்பொழுது சில விசயங்களில் பரபரப்பாக அரசை நோக்கி கேள்விகளை கேட்பதும், கண்டனங்களை எழுப்புவதும் ஆக தாங்கள் எந்த தலையீடும் இன்றி சுதந்திரமாக செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்கின்றனர்.

ஆனால் உண்மையோ அதற்க்கு நேர்மாறானது. பல்வேறு ஊழல் வழக்குகள் முதல் அப்சல் குரு போன்ற அரசியல் பலிகிடாக்கல் வரை உள்ள எல்லா விசயங்களிலும் நீதிமன்றங்கள் ஆளும் வர்க்கத்துக்கும், அரசு பயங்கரவாதத்திற்கும் ஒரு கொடுக்காகவே செயல்பட்டு வருகின்றனர்.

அப்சல் குரு விசயத்தில் அரசும், நீதிமன்றங்களும் நேர்மையா நடந்திருக்கும் என்றால், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சட்டப்படி வழக்காட போதிய அவகாசமும், வாய்ப்புகளும், சட்ட உதவிகளும் அளித்திருக்க வேண்டும். அவருக்கு எந்த சட்ட உதவியும் அளிக்கமால் ஒருதலைபட்சமாக நடத்தப்பட்ட விசாரணையில் கூட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்பதால் தண்டனையை குறைத்து ஆயுள்தண்டனையாவது குடுத்திருக்கலாம். அதையும் செய்யாமல், ஏன் இந்த அவசர தீர்ப்பும், அவசர தண்டனையும்? இது யாரை சமாதானப்படுத்த செய்யப்பட்டது. இது நிச்சயம் உள்நோக்கமும், பச்சை அரசியல்தனமும் கொண்டது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்கிற நீதிதுறை நீதி இதில் அப்பட்டமாக  மீறப்பட்டுள்ளது.

அப்ஸல் குரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள். இருந்தும்  சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதித்த டெல்லி விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிச் செய்தது. இதே கூட்டு மனசாட்சியை பார்முலா தொடர் குண்டுவெடிப்பில் சிக்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மீது பாயுமா? இதுதான் நாடு நிலையாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வி?

No comments: