Jan 5, 2013

சிறப்பு முகாம் என்கிற சிறைக்கூடத்தில் தமிழர்கள் அவதி!

Jan 06: தமிழ் நாட்டில் சிறப்பு முகாம் என்கிற பெயரில் ஒரு சிறை கூடத்தை ஏற்ப்படுத்தி அதில் இலங்கை தமிழர்களை அடைத்து வைத்து  வேதனைப் படுத்துகிறது தமிழக அரசு.

செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில்  42 இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை திறந்தவெளி முகாமிற்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

13 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் 16 பேருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியிலும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 6 பேர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ஸ்ரீகாந்த் என்பவர்  இதயநோயாளி.

இவர்களை சிறையில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழ் மக்கள் 125 பொது முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்கள்  22 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே தங்கி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது குறிவைத்து பிடித்து வழக்குகளை போட்டு அடைத்து வைத்திருப்பது நியாயமல்ல. அது அகதிகள் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்  எந்தவித வசதியும் இல்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் கைதிகள் போல் அடைத்து வைத்து கொடுமைபடுத்தப்படும் அவர்களை உடனே  விடுதலை செய்து சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்களும் மற்றைய அகதிகள் போல் பொது அகதிகள் முகாமில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும்.  செய்யுமா தமிழக அரசு!

பெயருக்கு ஈழத்தமிழர்களுக்கு உதவ போகிறோம் என்று ஜெயாவும், கருணாநிதியும் அறிக்கைகளை கொடுத்தால் மட்டும் போதாது, அடைக்கலம் தேடி வந்தவர்களை ராஜபக்சே மாதிரி நடத்தாமல் இருந்தால் சரி.

1 comment:

Anonymous said...

தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவார்களே தவிர யாரும் உதவ மாட்டார்கள்.