Jan 4, 2013

வாழ்வா! சாவா! இறுதிகட்ட போராட்டம்! ஆதரவு கொடுங்கள்!

Jan 05: இந்திய வரலாற்றில்  "கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கு நிகரான" ஒரு  நீண்டகால மக்கள் போராட்டத்தை நம்மால் பார்த்திருக்க முடியாது. இந்திய வரலாற்றில் இது மாபெரும் மக்கள் போராட்டமாக அவதானிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வருடங்களுக்கு  மேலாக, கூடங்குளம் பகுதி மக்கள், அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை  நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்த மக்கள் போராட்டங்களை, அடக்கு முறைகளை ஏவி முடிவுக்கு கொண்டுவர பார்க்கிறது மத்திய, மாநில மக்கள் விரோத அரசுகள்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரு வாரங்களில் மின்உற்பத்தி தொடங்கும் என இந்திய அணு சக்தி துறை தலைவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் மத்திய மந்திரி நாராயணசாமி, வருகிற 15-ந்தேதி மின்உற்பத்தி தொடங்கும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவுப்புகள் அணு உலை எதிர்ப்பு போராட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

’’இது குறித்து டாக்டர் உதயகுமார் கூறுகையில்:  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்க, அணு சக்தி துறை தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் நாராயண சாமி ஆகியோர் அணு உலையில் உற்பத்தியை தொடங்கப்போவதாக அறிவித்திருப்பது முறைகேடான செயல் ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மத்திய மந்திரி நாராயணசாமி, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாக கூறினார். மின்உற்பத்தி பணி தொடங்குவதற்கு முன்கசிவு எற்பட்டது எப்படி என்பது தெரியவில்லை. ஆகவே கசிவு ஏற்பட்டது குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை..இந்த நிலையில்  2 வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய மந்திரியும், அணு சக்தி துறை தலைவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இப்படி அறிவித்திருப்பது கோர்ட்டை மதிக்காத செயல் ஆகும். ஆகவே நாங்கள் இறுதிக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய இடிந்தகரையில் வருகிற 13-ந்தேதி சமுதாக கூட்டம் நடத்துகிறோம். இதில் பங்கேற்க கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்புளி, தோமையார்புரம், இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த அனைத்து மீனவர்கள் மற்றும் ஊர்த்தலைவர்கள் ஒன்று கூடி ஆலோனை நடத்தி இறுதிக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்’’என்று தெரிவித்தார்.

வாழ்வா! சாவா! இறுதிகட்ட போராட்டம் நடத்தும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு,  தமிழர்களே! ஆதரவு கொடுங்கள்!
 
*மலர் விழி*

1 comment:

Anonymous said...

நிச்சயமாக தமிழர்கள் அனைவரும் இதற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும். AZAD - NELLAI