Jan 6, 2013

மனிதர்கள் செத்தால் கவலையில்லை! மிருகங்கள் வாழவேண்டும்!

Jan 07: செய்தி: சென்னை தாம்பரம் வழியாக சனிக்கிழமை நள்ளிரவு 4 லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புளூகிராஸ்  விரைந்து வந்த எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரிகளை மடக்கி பிடித்து போலீசுக்கு தெரிவித்தனர்.

போலீசார் லாரியுடன் எருமை மாடுகளை மீட்டு டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் கவரப்பேட்டையில் இருந்து ஓட்டன்சத்திரத்திற்கு இறைச்சிக்காக விற்பனை செய்ய மாடுகளை ஏற்றிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டிரைவர்கள் சரவணன், செல்வராஜ், சிவக்குமார், சிவராமன் ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் 113 எருமை மாடுகள் மீட்கப்பட்டது. அவற்றை உளுந்தூர்பேட்டையில் உள்ள மாடுகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்

சிந்திக்கவும்: "புளூகிராஸ்" பணக்கார கோட்டான்கள் நேர போக்குக்கு உண்டாக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு. இலகுவாக நாங்களும் சேவைகள் செய்கிறோம் என்று காட்டி கொள்ள தொடங்கப்பட்ட அமைப்பு.

ஏழை, எளிய மக்கள் பசி, பட்டினி, ஜாதிகொடுமை, பாலியல் வன்கொடுமை,  மதவாதம், அரசு பயங்கரவாதம், என்று பல்வேறு பிரச்சனைகளில் தினமும் கொல்லப்படுகின்றனர், பாதிக்கப்படுகின்றனர் இதை பற்றி என்றாவாது பேசி உண்டா இவர்கள்?

இது ஒரு போலித்தனமான மிருக அனுதாபம். இந்த, பணக்கார கோட்டான்கள் ஏசி கார்களில் வலம் வந்து வெளிநாட்டு மதுவகைகளை குடித்து பார்ட்டி, பப்பு, என்று மப்பேறி உயர்வகை உணவுகளை உண்டு கொளுத்தது திரியும் சோம்பேறி கூட்டம்.

காவேரி டெல்டா விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள், ஏழை, எளிய மக்களின் சிறந்த ஊட்ட சத்து உணவாக மாட்டுக்கறி விளங்குகிறது. அதையும் அவர்களை திங்கவிடாமல் செய்வதில், இந்த பணக்கார, வக்கிரம் பிடித்த, ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத மேல்தட்டுகாரர்களுக்கு என்ன சந்தோசமோ புரியவில்லை.

 புளூகிராஸ் போன்ற மனிதகுல விரோதிகளை நாட்டை விட்டே அடித்து துரத்த வேண்டும். அப்பொழுதுதான் மனித இனம் நிம்மதியாக வாழமுடியும்.

 *மலர் விழி*

1 comment:

Seeni said...

kodumaithaanga ..