.jpg)
அடக்குமுறைகள் தொடரும் காலம் எல்லாம் விடுதலை போராட்டங்கள் மீண்டும் உயிர் பெரும். அந்த அடிப்படையில் தமிழீழ போராட்டமும் மீண்டும் வலுப்பெறும் என்கிற நம்பிக்கை துளிர்விட தொடங்கி விட்டது.
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பொதுமக்களும், போராளிகளும் நிறைய அளவில் கொல்லப்பட்டாலும் தமிழ் ஈழம் என்பது இலங்கை தமிழர்களின் பிறப்புரிமை அதை அடக்குமுறைகளை கொண்டு மவுனிக்க செய்ய முடியாது.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எல்லாளன் படை பிரிவை சேர்ந்தவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் சண்டை காலங்களில் போர் ஆயுதங்கள் இலங்கை தமிழீழப் பகுதி எங்கும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அதை புனரமைப்பு, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் சிங்கள ராணுவம் கைப்பற்றி வருகின்றனர்.
மேலும் காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என இலங்கை ராணுவம் கடந்த சில நாட்களாக அறிவித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் எமது போர் ஆயுதங்கள், இயக்க உடைமைகள், ஆவணங்கள் காணப்படும் இடத்தை ராணுவத்தினருக்கு காட்டிக் கொடுக்காமல் உரிய முறையில் பேணி பாதுகாத்து காலச்சுழலில் உங்களுக்கான தொடர்புகள் உருவாகின்றபோது உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிந்திக்கவும்: இதில் இருந்து மீண்டும் ஈழப்போராட்டம் கட்டி அமைக்கப்படும் என்ற நம்பிக்கை தளிர்விடுகிறது. ஈழப்போராட்டம் என்பது இனி இலங்கையில் இருந்து தொடங்கப்படுவதற்கு பதில் இந்தியாவில் அதாவது தமிழகத்தில் இருந்து தொடங்கப்படல் வேண்டும். ஈழப்போராட்டத்தை நசுக்க துணை போன இந்தியாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
3 comments:
ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு வேண்டி இந்தியாவை உடைக்கவேண்டும் என்று சொல்ல வாறீரா####
vudaicha enna thappa...indhia thamizhanum adimaiye
ஏன் இப்படி சொல்கின்றீர்கள். மீண்டும் ஒரு யுத்தம் எனும் போர்வையில் அப்பாவி இளைஞர் யுவதிகளை பலிக்கடாவாக்கும் திட்டமோ? இவ்வாறான செய்திகள் மூலம் புலிகள் இலங்கையில் இருக்கின்றார்கள் என்று அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகள்தான் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படுவார்கள்
Post a Comment