Nov 25, 2012

மரணத்தோடு ஒன்டே மேட்ச் விளையாடியவர்!


Nov 26: வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது மு.க ஸ்டாலின் அஞ்சலி உரை நிகழ்த்தினார். அப்போது அண்ணன் வீரபாண்டியாரை சேலத்து சிங்கம் என அழைக்கின்றனர்.
 
தலைவர் கலைஞருக்கு பிறகு நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர் அண்ணன் வீரபாண்டியார் தான். அவர் இன்னும் 10 வருடம் வாழ்ந்துருக்க கூடியவர். ஆனால் வாழமுடியாமல் செய்தது ஜெ ஆட்சி தான். இதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
 
வீரபாண்டியார் மரணத்தோடு போராடி பல முறை வென்றவர். அவர் ஒரு போராளி. இந்த முறை மரணம் வெற்றியின் ருசியை அறியட்டும் என விட்டுகொடுத்துவிட்டார். அவர் நம் மனதில் வாழ்கிறார். அவர் விட்டு சென்ற இடத்தில இருந்து அவரின் லட்சியங்களை, தி.மு.க கொள்கைகள் வெல்ல நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.
 
சிந்திக்கவும்: 1). அண்ணன் வீரபாண்டியார் திமுகாவுக்கு வேண்டுமானால் சிங்கமாக இருக்கலாம் எப்படி மொத்த சேலத்துக்கும் சிங்கம் ஆனாரோ தெரியவில்லை. இவர்களா ஒரு பட்டத்தை சூட்டி கொள்ள வேண்டியது. பாவம் இந்த மிருகங்கள் காட்டில் இருந்து வந்து தங்கள் பெயருக்கு உரிமை கொண்டாடாது என்கிற தைரியம்தான்.
 
2) வீரபாண்டியார் இன்னும் 10 வருடம் வாழ்ந்திருக்க கூடியவர் என்று பகுத்தறிவு பாலகன் ஸ்டாலின் ஆருடம் கூறுகிறார். அவரை வாழமுடியாமல் செய்ததே ஜெயாவின் ஆட்சிதான் என்றும் அதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று வீரசபதம் எடுக்கிறார். ஜெயாவின் ஆட்சிக்கும் வீரபாண்டியார் மரணத்துக்கும் என்னதான் சம்மந்தமோ, ஸ்டாலினின் பகுத்தறிவு இங்கே மலையேறி போயிவிட்டதது.
 
3). வீரபாண்டியார் மரணத்தோடு போராடி பலமுறை வென்றவராம் ஏதோ ஒன்டே கிரிக்கெட் மேட்சில் விளையாடி ஜெயித்தது மாதிரி சொல்கிறார். அது மட்டுமா அவர் ஒரு போராளியாம், சும்மா சிரிக்க கூடாது கெட்ட கோபம் வரும் எனக்கு அண்ணன் ஸ்டாலின் சொல்லிட்டாரிள்ளே, அவரு சொல்லி தப்பா இருக்குமா? இலங்கையில் தமிழ் மக்களின்  உரிமைகளுக்காக இந்தியாவுக்கு தெரியாமல் போராடினாரோ என்னவோ, இவரு மக்களுக்காக என்ன போராடினார் எதற்கு இவர் போராளி ஆனார் என்றெல்லாம் சின்னபுள்ளை தனமா கேள்வி கேட்க்க கூடாது.
 
4). வீரபாண்டியார் பலமுறை மரணத்தோடு போராடி ஐயோ பாவமே என்று மரணம் வெற்றியின் ருசியை அறியட்டும் என்று விட்டு கொடுத்து விட்டாராம். மரணத்தை பார்த்தாராம் அதன் மீது இரக்கப்பட்டாராம் கடைசியில் மரணம் பாவம் என்று செத்து போனாராம். இவ்வளவு கேவலமா பேச நம்ம அரசியல்வாதிகளுக்குத்தான் முடியும், மற்ற நாட்டில் இப்படியெல்லாம் பேசினால் அழுகிய முட்டையை, செருப்பை தூக்கி வீசுவார்களே.

நம்ம மானம் கெட்ட தமிழ் பத்திரிக்கைகள் பால்தாக்ரே, வீரபாண்டி ஆறுமகம் இறப்பிற்கு பத்திரிகை முழுவதையும் நிரப்ப செய்திகள். ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் இறந்ததற்கு செய்தி போடவேண்டியதுதான் அதற்க்கு இப்படியா திரும்பிய பக்கம் எல்லாம் செய்தி. நம்ம தமிழ் பத்திர்க்கைகள் மாதிரி கேவலமான பத்திரிக்கைகள் உலகில் எங்கும் இருக்க முடியாது. பத்திரிக்கையை நிரப்ப வேண்டும் என்று கண்டதையும் எழுதுவது, பொதி சுமக்கிற கழுதைகள் மாதிரி.

1 comment:

Anonymous said...

பிறப்பு இறப்பு என்பது என்னவோ முக ஸ்டாலின் கையில் இருப்பது போல் அல்லவா பேசி இருக்கிறார்.