May 4, 2011

57 வது படை அணி தளபதி மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

May 5, இலங்கை இராணுவத்தின் 57 வது படை அணியின் தளபதி ஜகத் டயஸ் தலைமையில் யுத்தக் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய இயக்கம் ECCHR ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களை பாரதூரமான ஒன்றாக எடுத்துக் கொள்ளுமாறும், அவரின் தனிப்பட்ட இந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை நடத்தும்படி கோரி இந்த அமைப்பு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெர்மனியில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விசாவை ரத்துச் செய்து இவரை வேண்டத்தகாத நபராகப் பிரகடனம் செய்யுமாரும் இந்த அமைப்பு ஜெர்மன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புக்கள் உட்பட பல அரச சார்பற்ற அமைப்புக்களின் நெருக்குதலின் பேரிலேயே இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதான பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமே ECCHR ஆகும்

1 comment:

அருள் said...

குழப்பும் வினவு: போற்க்குற்ற விசாரணையின் எதிரி யார்?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post.html