
இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது.
இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது.
மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.
இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.
1 comment:
அண்ணனுக்கு தம்பி ஒன்றும் குறைந்தவனல்ல என்பதனை இருநாடுகளின் நரவேட்டையின் மூலம் தெரிகின்றது. அத்துடன் என்னதான் ஆட்டம் போட்டாலும இந்திய கொலைவெறி அரசுக்கு சிங்கள கொலைவெறியர் ஒரு போதும் சார்பாக இருக்க மாட்டார்கள், இருக்கவும் இல்லை என்பது நிதாசனம். இன்றைய பொழுதும் இந்தியாவிற்கு சார்பாக தன்னைக் காட்டிக் கொண்டிருப்பது நரவேட்டைக்கான குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கே. அதுவும் இந்தியாவின் உதவியுடன் முடிந்து விட்டால் பின் இந்தியனை ஒரு தூசாக கூட மதிக்காது சிங்கள இனவாத கொலைவெறி அரசு.
Post a Comment