Apr 27, 2011

இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்!!

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது.

அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

மாணவிகள் இருக்கையின் முன் பகுதிக்கு சென்றாலும் அந்த நபர் விடாமல் தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார்.

அந்த நபரின் சில்மிஷம் அதிகமானதால் அந்த 3 மாணவிகளும் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

ஆனாலும் அந்த நபர் அந்த இருக்கை அருகே சென்றும் அந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தார். மாணவிகள் அவரை முறைத்து பார்த்து திட்டினர்.

ஆனாலும் அந்த நபர் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அத்துமீறலில் இறங்கியுள்ளார். பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது 3 மாணவிகளும் கீழே இறங்கி கொண்டனர்.

அந்த நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அந்த நபரை 3 மாணவிகளும் சுற்றிவளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த மாணவிகளிடம் ஏன் அடிக்கீறிர்கள் என்றனர். அப்போது நடந்த விபரங்களை மாணவிகள் கூறியதும், அருகில் இருந்த பஸ் பயணிகள் அனைவரும் சேர்ந்து தாக்க தொடங்கினர்.

வலி தாங்க முடியாத அந்த நபர் தான் போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் இருந்து தப்பி தர்மபுரி பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் ஓடி ஒளிந்தார்.

இதையடுத்து 3 மாணவிகளும் தங்களது செல்போனில் அந்த சில்மிஷ போலீஸ்காரரை போட்டோ எடுத்தனர். மேலும் உன்னை சும்மா விட மாட்டோம் போலீசில் உன்மீது புகார் கூறுகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பஸ்நிலையம் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் பஸ்நிலைய தாதாக்கள் சிலர் அந்த மாணவிகளை பார்த்து நீங்கள் படிக்கின்ற மாணவிகள் போலீசில் புகார் செய்யவேண்டாம்.

உங்கள் படிப்பு வீணாகி விடும் போய் விடுங்கள், இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாணவிகளை புகார் கொடுக்க விடாமல் தடுத்து அனுப்பி வைத்தனர்.

சிந்திக்கவும்: இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும். அப்போதான் இவனுங்கள் அடங்குவாங்கள்!! வேலியே பயிரை மேந்த கதை!! இந்த போலீஸ் பொறுக்கிகளின் தொல்லைகள் தாங்கலப்பா!!

இவனுங்கள கட்டுபடுத்த முதல்ல ஒரு நல்ல சட்டமா கொண்டுவரணும். அமெரிக்க போன்ற நாடுகளில் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் போதும். இந்திய போலீஸ் மாதிரி கேடுகெட்ட போலீஸ் உலகில் எங்கும் பார்க்க முடியாது.

1 comment:

பாரதசாரி said...
This comment has been removed by the author.