
இக்கருவி செயல்படும் முறை குறித்து அருண் குமார் கூறியதாவது: வாகனத்தின் முன்பக்கத்தில் சிறிய அளவிலான சென்சார் கருவி பொருத்தப்படும். இக்கருவி, ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் மொபைல் போனுடன் இணைக்கப்படுகிறது. விபத்து நடந்தால் அதிர்வு மூலம் உணரும் சென்சார் கருவி, மொபைல் போனுடன் இணைந்து, சில எண்களுக்கு விபத்து நடந்திருப்பது குறித்து தானாகவே தகவல் அனுப்பி விடும். எந்த இடத்தில் விபத்து நடந்துள்ளது என்பதை ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் சிக்னல் டவர் மூலம் அறிந்து, அந்த தகவலையும் அனுப்பிவிடும். நிறைய எண்களை இதில் பதிந்து கொள்ள முடியும். இதனால், அவசர சிகிச்சை மையம், நண்பர்கள், உறவினர்களுக்கு எளிதில் தகவல் சென்றடையும். விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைக்கும். சிறிய அளவிலான இயந்திரம் என்பதால், எளிதில் பொருத்த முடியும். தொலைவு ஒரு பொருட்டே அல்ல. எல்லாப் பகுதிகளிலும் இக்கருவி செயல்படும். இவ்வாறு, அருண்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment