Sep 7, 2010

இந்தியாவின் முஸ்லிம் விரோத போக்கு: மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கும்.


திருவனந்தபுரம்: கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை
நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியாக இந்தியாவில் கடலோர மாநிலங்களின் முக்கிய நகரங்களை தாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக தனது கடலோரப் பகுதிகளில் அந்த போராளிகள் அமைப்பை சார்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதை நமது உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.போராளிகள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

கேரளாவில் பேராசிரியரின் கையை இந்திய மக்கள் முன்னணி தொண்டர்கள்(பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா) வெட்டியது தொடர்பாக தேசிய அளவில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி பரிசீலித்து வருகிறோம். கேரளாவுக்கு எதிர்காலத்தில் மத தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார் பிள்ளை. வயநாடு வனப் பகுதிகளில் நக்ஸல்களின் ஆதிக்கம் பரவி வருவது குறித்தும், அதை தடுப்பது குறித்தும் கேரள காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனைகளி்ல் பிள்ளை ஈடுபட்டுள்ளார்.

சிந்திக்கவும் : இனி இந்தியாவில் யாருக்கும் காய்ச்சல் வந்தாலும் அதற்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று சொல்ல கூடிய அளவுக்கு இந்த அரசும், உளவுத்துறையும் ஒரு கேடுகெட்ட நிலைக்கு போகிவிட்டது. இவர்கள் முழுக்க முழுக்க ஹிந்துத்துவ ஆதரவு அரசாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் காஷ்மீர் முதல் பாபர் மசூதி வரை உள்ள எல்லா விசயங்களிலும் சரி ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான ஒரு நிலையோடு செயல்பட்டு வருவதை பார்க்க முடியும். செப்டம்பர் 17 ல் பாபர் மசூதி தீர்ப்பு வர இருக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் அவர்கள் இந்த தீர்ப்பை வரவிடாமல் தடுக்க இந்தியா முழுவதும் கலவரங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அப்படி கலவரங்கள் நடத்தினால் அதை காரணம் காட்டி முஸ்லிம் இயக்கங்களை தடை செய்ய இந்த பாசிச ஆதரவு அரசு திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதற்க்கான முன்னோட்டம்தான் இந்த செய்திகள்.

இதுபோல்தான் இவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் செய்தார்கள். மசூதியை இடித்த பயங்கரவாத ஹிந்துத்துவா இயக்கங்களை விட்டு விட்டு ஜமாத்தே இஸ்லாமி, சிமி, போன்ற முஸ்லிம் இயக்கங்களை தடைசெய்தார்கள். மும்பை கலவர கொடூரன் பால் தாக்ரே மற்றும் குஜராத் கலவர ரத்த வெறிபிடித்த காடேறி பிணம் தின்னும் நரந்திர மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, அசோக் சிங்கால், இப்படி எல்லா தீவிரவாதிகளும், ஹிந்து தீவிரவாத இயக்கங்களும் வெளியே இருக்க முஸ்லிம் இயக்கங்களை மட்டும் தடை பண்ணினார்கள்,முஸ்லிம் தலைவர்களை பிடித்து சிறையில் போட்டார்கள் இந்த அயோக்கிய காங்கிரஸ் அரசு.

முஸ்லிம்கள் காங்கிரஸ், மற்றும் கம்னிஸ்ட் கட்சிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக தகர்க்க கூடிய வகையில் அந்த கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கட்சிகளில் ஹிந்துவா அமைப்பினர் வூடுருவி விட்டார்கள் என்பதை கடந்த கலங்களின் செயல்பாடுகளும், இப்பொது அவர்கள் செயல்பட்டு வரும் விதமும் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.முஸ்லிம்கள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று நம்பும் அந்த நம்பிக்கையை தகர்க்கும் ஒவ்வொரு காரியமும் இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆசிரியர்: சிந்திக்கவும்.

தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகள்.


கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.

Sep 6, 2010

சீனா விவகாரத்தில் போதிய முன்னெச்சரிக்கை தேவை: பிரதமர் மன்மோகன் சிங்.


புதுதில்லி, செப்.6- சீனா விவகாரங்களில் போதிய முன்னெச்சரிக்கையுடன் நாம் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.தில்லியில் இன்று பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், சீனாவுடனான பிரச்னைகளில் அமைதியான தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும், இருநாட்டு உறவு என்பது போட்டி மற்றும் நட்பு கலந்ததாக தொடர்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

காஷ்மீர் மற்றும் விசா தொடர்பான விவகாரங்களில் சீனா சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்திவருவதால் இந்திய இராணுவத்தளபதி இலங்கை பயணம்.


இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் அமைக்க முயன்று வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு சீனாவை விட அதிகளவில் ராணுவ உதவிகள் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.இந்திய இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளைத் துவக்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.தனது மனைவியுடன் சென்ற சிங்கை கொழும்பு விமான நிலையத்தில், இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.

வி.கே.சிங்குக்கு இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜகத் ஜெயசூர்யா மற்றும் இலங்கை ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய `ஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, `யுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sep 5, 2010

காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்.

டெல்லி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் காவி பயஙகரவாதம் பற்றி பேசியுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்று கூறியுள்ளது தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்.

சிந்திக்க: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதுதான் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதுதான் ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது கலவரங்கள் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுபினர்கள் நிறைந்த கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போல்தான் அ.தி.மு.க மற்றும் மற்றைய கட்சிகளும்.

கை வெட்டப்பட்ட கேரளா ஆசிரியர் கல்லூரியில் இருந்து விலக்கபட்டார்.

திருவனந்தபுரம்,செப்.5:கேரளாவில் மத உணர்வை களங்கப்படுத்தியதாக கை வெட்டப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் நேற்று டிஸ்மிஸ் செய்தது. கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழாவில் 'நியூமேன் கல்லூரி' உள்ளது. இதில், மலையாள துறை பேராசிரியராக ஜோசப் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த தேர்வில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு வினாத்தாள் தயாரித்திருந்தார். இதனைக் கண்டித்து மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து, கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், 2 மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோசப்பை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டது. கேரளாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு இப்போதுதான் மருத்துவமனையில் இருந்து ஜோசப் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நேற்று அவரை திடீரென டிஸ்மிஸ் செய்தது. கேள்வித்தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்" என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

உலகின் அதிவேக கம்ப்யூட்டர்: சீனா சாதனை.

பெய்ஜிங்,செப்.5:சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்பப்பிரிவு பல்கலைகழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. தியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது.

கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது. 1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல். இந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன்,பயோ மெடிக்கல்,வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி, செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.

Sep 4, 2010

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் கலவரம் செய்ய சதித்திட்டம்..

புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது. இந்த தீர்ப்பை ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. இந்த தீர்ப்பை வழங்கவிடாமல் கலவரங்களை நடத்த ஆர்.எஸ்..எஸ். தீவிரவாத அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் 35000 துணைராணுவப் படையினரை குவிக்க அரசு முடிவுசெய்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

35000 துணைராணுவப் படையினரை(400 கம்பெனி) அனுப்ப உ.பி.அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது.முன்னர் உ.பி.கவர்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இவ்வளவு ராணுவத்தினர் தேவை என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் மாயாவதி ஆதரித்துள்ளார்.அயோத்தியா, ஃபாஸியாபாத் ஆகியவை மட்டுமின்றி வாராணாசி, கான்பூர், லக்னோ, மாத்துரா, அலஹபாத், கோண்டா, அலிகர், மொராதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களில் ஹிந்து தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவேண்டும் என மாநில அரசு கருதுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி மும்பை ஜெயிலுக்கு மாற்றம்.


மும்பை,செப்.4:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துதுவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நேற்று மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நாசிக்கில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் இவ் வழக்கை மீண்டும் மொக்கா சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் மும்பை சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். ஆனால் பிரக்யாசிங் தன்னை நாசிக் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார். மொக்கா கோர்ட் சிறப்பு நீதிபதி இக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

Sep 3, 2010

உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.


அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியானது தடை செய்யப்பட சிமி என்ற இயக்கத்தின் மறுபதிப்புதான் பாப்புலர் பிரண்ட் என்றும் கோவை, மதுரை, நாகை, திண்டுக்கல் ஆகிய ஏரியாக்களில் இவர்களால் மதப்பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .

பாப்புலர் பிரண்டிற்கும் சிமி என்ற இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை, மேலும் மதப்பிரச்சினை ஏற்ப்பட வாய்ப்பு என்கின்றார். மதப்பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நச்சு எண்ணம் பாப்புலர் பிரண்டின் சித்தாந்தந்திலோ, செயல்பாட்டிலோ இல்லாத ஒன்று என்பதற்கு தமிழகத்தில் மனித நீதி பாசறை யாகவும் தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவாகவும் செயல்பட்டு வரும் கடந்த 11 வருட கால செயல்பாடுகளே சாட்சியாக இருக்கின்றது .

மேலும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுமார் 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது . தமிழக உளவுத்துறை ஒரு கண்ணை கொண்டு மட்டுமில்லாமல் மொத்த கண்களை கொண்டும் பாப்புலர் பிரண்டை பார்த்தாகி விட்டது. இதற்கு மேலும் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முஸ்லிம் சமூகத்தை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு சமூக இயக்கம் என்பதை தவிர வேறொன்றுமில்லை

எனவே மக்கள் பேரியக்கமான பாப்புலர் பிரண்டின் கண்ணியத்தை சீரழிக்கும் வகையில் உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட் அவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாற்றமானது , அடிப்படை ஆதாரமில்லாதது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீதிக்காக பாப்புலர் பிரண்டின் போராட்டம் தொடரும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

இப்படிக்கு:மு முஹம்மது அலி ஜின்னா- மாநில தலைவர்- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.

Sep 2, 2010

வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற 103 லாரிகள் மயம்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவை தகர்க்க சதியா? .

ஜெய்ப்பூர்,செப். ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய வெடிப்பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ராஜஸ்தான் வெடிபொருள் கிட்டங்கியில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளில் 61 லாரிகளை காணவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதில் சில லாரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற லாரிகள் எப்படி மாயமாயின என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் இந்த லாரிகளில் உள்ள வெடிபொருட்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு மறைமுகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வெடிபொருட்களை பயன்படுத்திதான் அஜ்மீர் முதல் மலேகான் குண்டு வெடிப்புகள் வரை கடந்த பத்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். நடாத்தி வருவதாகவும் அதிகார பூர்வமான உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் சீக்கிரம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் மேலும் 103 லாரிகள் வெடிப்பொருட்களுடன் மாயமாகிவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த 103 லாரிகளிலும் சுமார் 450 டன் எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்தன. 103 வெடி பொருள் லாரிகள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை. இந்த 103 லாரிகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேரவில்லை. இந்த 103 லாரிகளையும் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு இந்த மாதம் வெளிவர இருக்கும் வேலையில் கோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்றும், கோர்ட் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் நாடு முழுவதும் கலவரம் நடத்துவோம் என்றும் ஹிந்துதுவா தீவிரவாத இயக்கங்கள் கடந்த சில மாதங்களாக மிரட்டல் விட்டு வருவது உளவுத்துறைக்கு மிகபெரிய சந்தேகத்தை எற்படுதிள்ளது.இந்த வெடிமருந்துக்களை வைத்து இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படலாம் என்றும் போலீஸ் மற்றும் உளவுத்துறையினர் உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.முதன் முறையாக தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து தீவிரவாத அமைப்புகள் தீவிர கண்காணிப்பு வலயத்திற்குள் வந்துள்ளார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியாக உள்ளது.சீக்கிரம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை தடை செய்வது குறித்து உள்துறை ஆய்வு செய்துவருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Sep 1, 2010

அமெரிக்காவின் குடிமக்கள் யாவரும் சமமே: க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் விவகாரத்தில் ஒபாமா அறிவிப்பு.

வாஷிங்டன்,செப்.1:அமெரிக்காவில் முஸ்லிம்களும் உரிமைகள் கொண்ட குடிமக்களாவர் அவர்களுக்கு பிறருக்குரிய உரிமைகள் போலவே அனைத்தும் கிடைக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். செப்.11 உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார் ஒபாமா.

கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை என்.பி.எஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள நேர்முகப்பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார் அவர்.

அவர் கூறியதாவது:"அமெரிக்க குடிமகனுக்கான மதச் சுதந்திரத்தைக் குறித்துதான் இஃப்தாரில் உரை நிகழ்த்தினேன். மாறாக, அது ஏதேனும் மஸ்ஜித் நிர்மாணத்தைக் குறித்தல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்ட மதிப்பீடுகளைப் பற்றித்தான் உரை நிகழ்த்தினேன். எனது வார்த்தைகள் மிகவும் தெளிவாகயிருந்தது. அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயமோ, யூத ஆலயமோ அல்லது ஹிந்துக் கோயிலோ கட்டுவதாகயிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் கூறியிருப்பேன்.

இஸ்லாத்தை விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு பிரிவினரை வேறுபடுத்தி பார்க்கவியலாது. முஸ்லிம்களும் அமெரிக்க குடிமக்களே! இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் உயர்த்திப்பிடித்துள்ள கொள்கையாகும். அதனை பாதுகாப்பது அதிபர் என்ற நிலையில் எனக்கு பொறுப்புள்ளது.

சட்டம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒன்றே. அதனை மீண்டும் உறுதிப்படுத்தவே நான் விரும்புகிறேன். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஈராக்கிற்கு சென்று போர் செய்து திரும்பிய முஸ்லிம்களும், இந்த நாட்டில் பதவிகளை வகிக்கும் முஸ்லிம்களும் உண்டு. அவர்களிடம், நீங்கள் உங்கள் மதத்தை துறந்தால்தான் இந்த நாட்டில் வாழமுடியும் என்று சொல்வதற்கு எவரால் இயலும்?" இவ்வாறு ஒபாமா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

ஒபாமா இஸ்லாமிய மத நம்பிக்கையாளர் என்று பிரச்சாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்: "அதில் எனக்கு கவலையில்லை. தவறான பிரச்சாரங்கள் இந்த ஊடக உலகில் சகஜமானது. எப்பொழுதும் என்னால் எனது பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிவிட்டு அலைய முடியாது. உண்மைகள் உண்மைகளாகும். வதந்திகளைக் குறித்து எனக்கு பதட்டம் இல்லை." என ஒபாமா கூறினார்.

ஒபாமா தற்பொழுதும் முஸ்லிம் என்று நம்பக்கூடியவர்கள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர் என கடந்தவாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
குவைத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க குடிமகன் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபும் அவருடைய இந்திய மனைவி டெய்ஸி கானும் இணைந்து கொர்தோவா ஹவுஸ் என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கி வைத்த 10 கோடி டாலர் மதிப்பிலான திட்டம்தான் சர்ச்சையைக் கிளப்பிய க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் திட்டம்.

ஜிம்னேஷியம், தியேட்டர், நூலகம், ரெஸ்ட்ராண்ட், பிரார்த்தனை ஹால் உள்ளிட்ட 13 மாடி இஸ்லாமிய கம்யூனிட்டி செண்டர்தான் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூத கம்யூனிட்டி செண்டருக்கு சமமான இந்த கலாச்சார மையம் நிர்மாணம் பூர்த்தியானாலும் கூட தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளான க்ரவுண்ட் ஜீரோவிலிருந்து காண்பதற்கு முடியாத தொலைவிலாகும்.

நியூயார்க்கில் பிரபல அமெரிக்க சொஸைட்டி ஃபார் அட்வான்ஸ்மெண்ட் என்ற அமைப்புடன் இணைந்து தனியார் நிலத்தில் கட்டத் தீர்மானித்திருக்கும் கலாச்சார மையத்திற்கு இஸ்லாத்தின் விரோதிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். யூத மதத்தைச் சார்ந்த நியூயார்க் மேயர் மைக்கிள் ப்ளூமெர்க் மஸ்ஜித் கட்ட அங்கீகாரம் அளித்தும் கூட அமெரிக்க ஊடகங்கள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.

மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான இரண்டு கொள்கை முடிவுகளை வரவேற்கிறோம்: கே. எம். ஷரீப்.

பெங்களுரு செப் 1,2010: வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வகை செய்யும் மசோதாவையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ல் சாதியையும் சேர்த்து சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய அரசின் முடிவையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது .

இந்த மசோதா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது . வெளிநாட்டில் இருக்கும்போது ஓட்டளிக்க இந்த மசோதா வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் கூடிய விரைவில் இன்டர்நெட்டின் மூலம் ஓட்டளிக்கும் வழிமுறையை அரசாங்கம் கருதிவருகிறது என்ற சட்ட அமைச்சரின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகளில் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவான "சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு " மிகவும் துணிச்சலான முடிவு . இது சமூக நீதி யையும் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் தகவல் களஞ்சியமாக இருக்கும்.

இது முழுமையாக வெற்றி பெறவும் சாதி கணக்கெடுப்பை உரிய முறையில் சரியாக பயன்படுத்தவும் இதனை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புடன் சேர்த்து உடனே எடுக்குமாறும் பயோமெட்ரிக் குடன் சேர்க்க வேண்டாம் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், சார்பாக SEED என்ற அறக்கட்டளை இதனை ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.