“இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிகள் மட்டுமே.அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார் அவ்வளவே. திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா? அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் தங்களை திராவிடர் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், தமிழன் மட்டும்தான் திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறான்.இந்தியன்,திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும்” என்றார்.





