"விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் சாகவில்லை,உயிருடன்தான் உள்ளார்.இதனை நான் உறுதியாக கூறமுடியும். அவர் தலைமையில் 5 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கும் போது அவர் வருவார், அப்போது அவர்களுக்கு தமிழர்கள் துணையிருக்க வேண்டும். ஈழப் போர் ஓய்ந்து விடவில்லை.இலங்கையில் நிச்சயம் தமிழீழம் மலரும்” என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஈகத்தூண்கள் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தலைமைவகித்து பேசிய போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது,”தமிழீழத்திற்காக தமிழத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு இது போன்ற நினைவுத்தூண்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.
தமிழகத்தில் மட்டும் அல்ல.வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத்தூண் அமைக்கப்பட்டது இல்லை என்ற வகையில் நினைவுத்தூண்கள் அமைக்கப்படவுள்ளது. நினைவுத்தூணுடன் நினைவு மண்டபமும் அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மே-17ஆம் தேதி இந்த மண்டமும், நினைவுத்தூண் திறந்து வைக்கப்படும். இதில் தீக்குளித்த தமிழ் தியாகிகளின் 18 பேரின் பெயர் மற்றும் உருவ ஓவியங்கள் இடம் பெறும். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ :தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.
ஈழ விடுதலை வரலாறு, இந்தியா மற்றும் உலக நாடுகளின் மவுனம் இவை அனைத்தும் எடுத்துச்சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல. தொடக்கம் தான். முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத்தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழவரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம். அங்கு தமிழ் ஈழம் மலரும்” என்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment