போபால்:26 வருடமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.ஆனால் நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!
இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.
1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயுத் தாக்கி 15,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். (2 ஆயிரத்து 259 பேர் மட்டும் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது).
இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது.இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார்.
எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன்கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.
போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும்.அதிகம் பட்சம் 2ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர்.போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: இந்தியாவில் நீதித்துறையும் காவல் துறையும் செத்துவிட்டது மக்கள் ஆயூத போராட்டத்தை துவங்கும் காலம் வந்துவிட்டது.மக்கள் ஆயூதம் ஏந்தி போராடினால் தான் இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment