இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.
டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின, குடும்ப உறுப்பினர்கள் பலர்,விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment