Dec 29, 2010
விசா கிடைப்பதில் காலதாமதம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தங்களுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, விசாவில் மோசடி செய்து இந்தியாவுக்கு பலமுறை வந்து சென்றார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக, விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பழைய பாஸ்போர்ட்டை சமர்பிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், ஒரு நாளில் வழங்கக்கூடிய விசாவுக்காக ஒரு மாத காலம் இழுத்தடிப்பதாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து ஹூஸ்டன், சிகாகோ, சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டின் போது, இப்பிரச்னையை கிளப்பப்போவதாக, சர்வதேச இந்திய வம்சா வழி அமைப்பின் தலைவர் இந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment