டெஸ்ட் போட்டியில் 50 சதம் அடித்துள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பாராட்டு விழா நடத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்த பிறகு பாராட்டு விழாவுக்கான தேதியை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்து மும்பை மாநகராட்சி ஆணையர் ஸ்வாதின் சத்ரியா, சச்சினுக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளார். 2010-ம் ஆண்டில் இருந்தே சச்சினின் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட இருந்த பல விழாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சச்சின் 50-வது சதம் அடித்தபோது அவருக்கு ஆணையாளர் வாழ்த்துத் தெரிவித்ததோடு, பாராட்டு விழாவுக்கு தேதி ஒதுக்குமாறும் கேட்டுள்ளார். மும்பை திரும்பியவுடன் தேதியை சொல்வதாக சச்சின் தெரிவித்துள்ளார்' என்று கூடுதல் ஆணையாளர் மனிஷா மாய்ஸ்கர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment