
ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது. உலக அழகி பட்டம் வென்றது, மாடலிங் உலகில் கொடிகட்டி பறந்தது, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது என மூன்று கட்டங்களை கொண்ட அவரது வாழ்க்கையில் பல இனிப்பான, கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல். பின்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறால் பிரிந்தனர். அதன்பின்னர் விவேக் ஓபுராயுடன் காதல் கொண்டார். திருமணம் வரை போன இவர்களது காதல், சில காரணங்களால் நின்றுபோனது. அதன் பின்னர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்திய சினிமா உலகில் நம்பர்-1 இடத்தை பிடித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்யின் வாழ்க்கையில் நடந்த காதல் சம்பவங்களை மட்டும் புத்தகமாக எழுதி வெளியிட்டால் நன்றாக விற்பனையாகும் என்று கருதி வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று ப்ளாங் செக்குடன் ஐஸ்வர்யா ராயை அணுகியது. கோடி, கோடியாக கொடுத்தாலும், எனது சொந்த வாழ்க்கையை புத்தகமாக எழுதி விற்கமாட்டேன் என்று மூஞ்சியில் அடித்தாற்போல் அந்த பதிப்பக நிறுவனத்திடம் கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். பாவம் அந்த வெளிநாட்டு பதிப்பகம் ஏமாந்து போனது.
1 comment:
ஆபாசமான படங்களை வெளியிடாதீர்கள்.இந்த செய்தி ரொம்ப முக்கியம்.
Post a Comment