
மேலும் அத்தகைய நிதி ஆதாரங்கள், பழைய விதிமுறைப்படி 6 மாதம் பழையதாக இருக்கவேண்டிய அவசியமின்றி, 3 மாதம் பழையதாக இருந்தாலே போதுமானது. மேலும் ஒரு மாணவருக்கு அவரின் துணைவரோ, பெற்றோரோ, உடன்பிறந்தவரோ, தாத்தா-பாட்டியோ மற்றும் வேறு நெருங்கிய உறவினரோ மட்டுமே நிதி செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, குறிப்பிட்ட விதிமுறைகளின்படி எந்தவொரு தனிமனிதரும் செலுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளை விஞ்சலாம் என்ற நம்பிக்கை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களும் சில சலுகைகளை இதன்மூலம் அனுபவிப்பார்கள். ஒரு மாணவர் முன்னதாகவே உணவுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால், அந்த தொகையானது, மாணவர் விசா பெறுவதற்கு காண்பிக்கும் வாழ்வாதாரத்திற்கான மொத்த தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment