Dec 11, 2010

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.

2 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 20-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

இனப்படுகொலைகள் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்படக்கூடியது..