சோவியத் கால நகரம் எவ்வாறு தோற்றமளிக்கும்? சோஷலிச சுவரோவியங்கள், லெனின் சிலை, இவை எல்லாவற்றையும் நீங்கள் இப்போதும் கண்டு களிக்கலாம். அதுவும் மேற்கத்திய ஐரோப்பிய நாடான நோர்வேயில்! சோவியத் மாதிரியில் கட்டப்பட்ட பாரேன்ட்ஸ்பூர்க் (Barentsburg) நகரம். 1920 ல், ஒரு டச்சு நிறுவனம் (Nespico) நிலக்கரிச் சுரங்க உற்பத்தியை பொறுப்பெடுத்தது. அது பின்னர், 1932 ல் ஒரு சோவியத் அரச நிறுவனத்திற்கு (Trust Arktikugol) விற்று விட்டது. அன்றிலிருந்து ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்து வருகின்றனர்.பாரேன்த்ஸ்பூர்க் நோர்வேக்கு சொந்தமான நிலத்தில் இருந்த போதிலும், சோவியத் அரச நிறுவனம் அங்கே சுதந்திரமாக செயற்பட முடிந்தது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பாரேன்த்ஸ்பூர்க் செல்ல விசா தேவையில்லை.
நன்றி: கலையகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment