Oct 13, 2010

தனி தமிழ் நாட்டின் இலட்சிய தலைவர் யார்?


தனி தமிழ் நாடு என்பது அவசியமான ஒன்று என்பதும் அதுதான் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் இருக்கும் ஆசை என்பதும் தெளிவாக தெரிந்த ஒன்றே. அப்படி இருக்க தமிழ் நாட்டில் இது குறித்து உண்டான இயக்கங்கள் எல்லாம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதையும் சரியான தலைமை இல்லாததும் தான் இதற்க்கு காரணம் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. நாம் எப்படி எல்லாம் இந்த மைய அரசால் நடத்தபடுகிறோம் என்பதற்கு ஒரு காவரி நதி நீர் பிரச்சனை போதும். ஹிந்தி மொழி பேசும் மற்ற எல்லா மாநிலங்களும் அந்த மாநிலங்களில் ஒன்றும் இல்லை என்றாலும் அவை சிற்பிக்கபடுவதும் எல்லா வளங்களும் இருந்தும் ஆறரை கோடி மக்களின் எந்த ஒரு உணர்வுக்கும் மதிப்பளிக்காமல் ஒரு இனவெறி அரசிற்கு ஆயூதங்கள் கொடுத்து அங்கிருந்த அனைத்து தமிழ் போராளிகளயும் மக்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்தார்கள்.

அது மட்டுமா செய்தார்கள் இப்பவும் அங்குள்ள தமிழ் மக்களின் நலன் குறித்து எதுவும் சிந்திக்காமல் சிங்கள இனவெறி அரசோடு சேர்ந்து அரசியல் நடத்துகிறார்கள். இலங்கைப் போரில் ஈழத் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த கொலைக் குற்றவாளியான ‘இடிஅமீன்’ ராஜபக்சேயை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது வேந்த
புண்ணில் வேல் பாச்சுவதாகும். இவர்களுக்கு தமிழ் மக்களின் உணர்வுகள் பற்றி எந்த கவலையும் இல்லை. இவர்கள் தமிழர்களையும், அவர்கள் உணர்வுகளையும் ஒரு பொருட்டாக மதிப்பவர்கள் இல்லை என்பது இவர்களின் கடந்த கால ஒவ்வொரு நடவடிக்கையும் தெளிவாக காட்டுகிறது.

ஆறரை கோடி தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இலங்கை தமிழர்களை சேர்த்து அகண்ட தமிழ் நாடு இதுதான் நமது லட்சியம். நமது லட்சிய தலைவன் யார்? இதுதான் இப்ப தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்வி. நமக்கு என்று ஒரு லட்சிய வேட்க்கை உள்ள ஒரு தலைவனை தேடுவோம். ஆறரை கோடி மக்களில் இருந்து ஒரு தலைவனை தேர்ந்தெடுப்பது சிரமாமா என்ன? நமது சிந்தனைகள் ,தேடல்கள் தொடரட்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்.

மினஞ்சல் பதிவு: உலக தமிழர் பாதுகாப்பு படை.

No comments: