Oct 13, 2010

சிலி நாட்டின் நிலக் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கி இருந்தவர்கள் மீட்பு.

சிலி நாட்டின் நிலக் கீழ் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை மாற்று வழியில் பூமியில் துளைகளை போட்டு வெளியே கொண்டு வந்து சாதனை படைத்தது சிலி அரசாங்கம்.

700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

2010.10.14 ஆம் தேதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிந்திக்க: இந்தியாவில் இது போன்றம் சம்பவ நிகழ்ந்திருப்பின் அனைவரது கெதியும் அதோ கெதி தான். அந்த நாட்டை பார்க்கும் போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. உயிரின் விலை என்ன என்று இது போல உள்ள நாடுகளில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ளுமா ? இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொல்ல ஆயூதம் கொடுக்க தெரியும். விமான நிலையத்தில் இருந்து ஒரு பெண்ணை தற்காலிக பாஸ்போர்ட் கொடுத்து மீட்க்க முடியாத ஒரு நாடுதானே அது , அதற்க்கு எங்கே தெரிய போகிறது இந்த கருமாந்திரம் எல்லாம் என்று நீங்கள் கேட்பது என்காதுகளில் கேட்கிறது.

No comments: