இஸ்லாமாபாத்,செப்.18:ஜம்மு-கஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார். கஷ்மீர் விவகாரத்தில் ஐ.நாவின் தீர்மானங்களின் படியும், கஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் ஆசுவாசமான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிப்பூண்டுள்ளதாக குரைஷி தெரிவித்தார்.
"கஷ்மீரிகளின் உரிமைகளுக்கு உறுதுணையாக இருப்போம். கஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள இந்திய அரசிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுக்கிறது.ஜம்மு-கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகளை பாகிஸ்தான் மிக்க கவனத்தில் கொள்கிறது. போராட்டக்காரர்களுக்கெதிராக வரம்பு மீறிய பலப்பிரயோகத்தை பாகிஸ்தான் கண்டிக்கிறது." இவ்வாறு குரைஷி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment