பஞ்சாப் மாநிலத்தில் மலேர்கொட்லா என்னுமிடத்தில் உள்ள ஒரு சர்ச் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு அதை முஸ்லிம்கள் தலையில் போடும் திட்டத்தோடு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.மலேர்கொட்லாவில் கணிசமான அளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் புனிதக் குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதை காரணமாக வைத்து கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டையை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் போல் உடையணிந்து அங்கிருந்த சர்ச்சின் அலங்கார மரப்பலகைக்கு தீ வைத்து கொளுத்திவிட்டனர். மேலும், அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டது.சர்ச்சுக்கு வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சங்ருர் மாவட்ட காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஹர்சரண் சிங் புளார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரோந்து போலீசாரின் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் வானில் சுட்டு எச்சரித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாக்குதல் சம்பவத்தில் லோக் பஜார் பகுதியில் தான் அதிகளவு வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து முஸ்லிம்களிடம் தீவிரவிசாரணை செய்த காவல்துறை முஸ்லிம்கள் இதை செய்யவில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த நேரத்தில் தங்களது பகுதிகளைவிட்டு வெளியே வரவில்லை என்றும் அறிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் பொது அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியவந்தது. இதையடுத்து இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தவிர வேற எந்தெந்த அமைப்புகள் சம்மந்தபட்டுள்ளது என்று தீவிரவிசாரணை நடந்துவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment