Nov 29, 2016

ATM வாசலில் குடித்தனம் நடத்தும் மக்கள்!

கோமாளி பிரதமர் மோடியின் ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பின்னால் மக்கள் ATM வாசலில் குடித்தனம் நடத்த வேண்டியது ஆகியது. பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர்.

90% ATM-கள் வேலை செய்யவில்லை. வங்கிக்கு உரிய முறையில் பணம் வரவில்லை. வங்கிகளில் போதிய பணம் இல்லை. தினமும் 4 ஆயிரம் என்று சொன்னார்கள். பின்னர் அது 2000 ரூபாயாக மருகியது. வங்கிகளில் வாயிலில் மக்கள் கூட்டம் குவிந்தது. வரிசைகள் 2 இல் இருந்து 4 கிலோமீட்டர் நீளம் வரை சென்றது. கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் இயங்கவில்லை. நிறைய கிராமங்களில் வங்கி கிளைகளே கிடையாது. அப்படி வங்கி கிளைகள் இல்லாத கிராமத்து மக்கள் பக்கத்து பெரிய ஊர்களுக்கு போக வேண்டியது இருந்தது. 

அப்படி வங்கியில் தவம் கிடந்தது கிடைத்த புதிய புதிய ரூ. 2000 நோட்டுகளுக்கு வெளியில் சில்லறை கிடைக்கவில்லை. இதுவரை ரூ. 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார். இவைகளில் பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் உழைத்து சேமித்தவையாகும். ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த ரூ. 5 லட்சம் கோடியும் கருப்புப் பணம், அதை எப்படி மீட்டோம் பாருங்கள் என்று ஏழை எளிய மக்களை அவமானப்படுத்தி வருகின்றனர்.  வங்கியில் பணம் எடுப்பவர்கள் கையில் மை வைப்பது போன்ற கொடூரங்களும், வரிசையை ஒழுங்கு படுத்த போலீஸ் தடியடி நடத்தியதும், வங்கி ஊழியர்கள் பொதுமக்களை தரக்குறைவாக பேசிய சம்பவங்களும், கூட்ட நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் வரிசையில் நின்று, என்று இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அன்றாடம் காய்ச்சிகள் தங்கள் வாழ்க்கையையும், நிம்மதியையும்  ATM மெஷின்கள் வாசலில் துளைத்து வருகின்றனர். 

No comments: