Aug 23, 2014

இஸ்ரேல் விமான தளங்களை தாக்க திட்டம்!

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் இருக்கும் விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் தவிர்க்க வேண்டும் என ஹமாஸ் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல்களை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை அமலுக்கு வருவதாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே சமாதானம் ஏற்படுத்த எகிப்து அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டரின் மனைவியும், 7 மாத குழந்தையும் பலியாகினர்.
இதனையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது. பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும் நல்ல வாய்ப்பை எதிரிகள் தொலைத்துவிட்டனர். இனி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை. கெய்ரோவில் இருந்து ஃபலஸ்தீன தலைவர்கள் நாடு திரும்புவதே நல்லது என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.   

No comments: