Jan 17, 2013

பெண்கள் குடிப்பது அவர்கள் சொந்த விசயம்! நடிகை திரிஷா!

Jan 18: சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது சரியா? தவறா என்ற கேள்விக்கு, அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

சிந்திக்கவும்: சினமா நடிகை குஸ்பு கற்பு குறித்து பேசி தமிழ் நாட்டு பெண்களிடம் செருப்படிபட்டார். தங்களை போல் எல்லோரும் ஆக வேண்டும் என்பதே இந்த நடிகைகளின் கவலை. அதனால் அடிக்கடி இதுபோன்ற சமூக சீர்திருத்த கருத்துக்களை இலவசமாக அள்ளி கொடுப்பார்கள். எப்படி கவர்ச்சியை தாராளமாக காட்டி வியாபாரம் செய்கிறார்களோ அதுமாதிரி.
 
சமீபத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபர் ஒருவரிடம் இவரது செல்போன் நம்பர் இருந்ததாக செய்திகள் வெளியானது இதை மறுத்த இவர் இந்த தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். ஆனால் பின்னர் இவர் அந்த நைஜீரிய வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.
 
இவரை போன்ற ஒரு நடிகைகள் கூட்டம் இருக்கின்றது, அவர்கள் பப்பு, பார்டி என்று குடித்து கும்மாளம் அடிக்கும் ரகம். மது அருந்துவது சரியா? தவறா? என்றால் தவறு என்றே சொல்ல வேண்டும். தான் குடிப்பதற்காக அது அவரவர் சொந்த விஷயம் என்று மதுவுக்கு பொது அங்கீகாரம் கொடுக்க நினைப்பது வெறுக்க தக்கது. திரிஷா எக்கேடு கெட்டும் போகட்டும் நமக்கு கவலை இல்லை.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம், தெலுங்கு நடிகர் பிரபாசுடன் மிட்நைட் பார்ட்டி, போதை பொருள் கடத்தும் நைஜீரியா வாலிபருடன் நெருக்கம் இதுவெல்லாம் அவர் சொந்தா விஷயம் இதில் யாரும் தலையிட வில்லை. மற்ற பெண்கள் குடிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி இவரது கருத்தும், அங்கீகாரமும் யாருக்கும் தேவையில்லை.
 
மதுவை ஒழிக்க சமூக சிந்தனையாளர்கள் தீராது பாடுபட்டு வரும் வேளையில், மதுக்கடைகளை தமிழகத்தில் ஒழித்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்த பல கட்சிகள், அமைப்புகள்  போராட்டங்கள் நடத்தும் இந்த வேளையில் திரிஷாவின் இந்த கேவலமான பேட்டி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

1 comment:

Seeni said...

neenga ezhuthiyathu sariye...