Jan 18, 2013

உண்மையான கொள்ளைகாரர்கள் யார்?

Jan 19: வீரப்பன் பிறந்த நாளை முன்னிட்டி இன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்  கேக் வெட்டி கொண்டாடினர். அதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.   இதனால் சட்டக்கல்லூரி வளாகமே பரப்பரப்பானது.

கோவை மட்டும் இல்லாமல், சத்தியமங்கலம், பர்கூர், அந்தியூர், மேட்டூர், தாளவாடி, திம்பம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியிலும், வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இது  குறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள்,  ’’வீரப்பன் இருந்த வரை காவிரியில் கர்நாடகம் நீரை தந்தது. வீரப்பன் தமிழ் நாட்டிற்கு சிறந்த காவலாக இருந்தார்.  அவருடைய மறைவுக்கு பிறகு கர்நாடகாவை சேர்ந்த சில அமைப்புகள் ஒகேனக்கல்லில் தமிழ் நாட்டுக்கு சொந்தமான நிலப்பகுதியை எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது என்றார்கள்.

சிந்திக்கவும்: சட்டம் படிக்கும் மாணவர்களும், வழக்கரிஞ்சர்களும், மக்களும் அரசாங்கத்தையும், போலீஸ்சையும் விட வீரப்பனை நம்புகின்றனர். படித்தவர்களும், மாணவர்களும்  போலீஸ்சையும், அரசாங்கத்தையும்  பற்றி எவ்வளவு கேவலமான மதிப்பீடு செய்திருகின்றனர் என்று இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது. வீரப்பனை மக்கள் கொள்ளைகாரனாக பார்க்க வில்லை, கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மற்றும் உள்ள ஊழல் அமைச்சர்களையும், அதிகாரிகளையுமே உண்மையான கொள்ளைகாரர்களாக பார்கிறார்கள்.

1 comment:

Anonymous said...

100/100 % unmai ungal karutthu