Jan 24, 2014

முக்கிய செய்திகள்! வாசிப்பது யாழினி!

1). அண்மையில் மோடி தேநீர் விற்கத்தான் லாயக்கானவர் என்று மணிசங்கர் அய்யர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோர மறுத்துவிட்டார்.
2). மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக பாஜக அளித்து வரும் வாக்குறுதிகள் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
3). “மோடியின் கரங்கள் அப்பாவிகளின் ரத்தம் தோய்ந்த கரங்கள்” என்று முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியில் இருந்த போது, 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, படுகொலைகளும், அடக்குமுறைகளும், கொடுமைகளும் அரங்கேறின. அதற்குப் பிறகும், மோடியை எப்படி பிரதமர் வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது என்பது தெரியவில்லை. இந்நிலையில் கோரக்பூரில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தை குஜராத்தாக மாற்றப் போவதாக கூறியுள்ளார் என்பதுதான் வேடிக்கை.
4).  “நீதித்துறையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து தலித் மற்றும் முஸ்லிம் சமுதாயம் நீதித்துறையில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் நீதித்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையாக நீதித்துறை விளங்குகிறது. அதில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதே சமயம் சமூக நீதி அடிப்படையில், சிறுபான்மை, தலித் வகுப்பினர் மற்றும் இதுவரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத மக்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்  என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

No comments: