Oct 10, 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலையும், பின்னணியும்!

Oct 11/2013: பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.

இதற்கு முன், பாரதிய ஜனதாவின் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து ஃபாசிச இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

அதை தொடர்ந்து
ர்கள் நடத்திய பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.

ற்ற  கொலைகளுக்கு காரணங்கள்:

தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமூகர்களும் பல காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கொலைகளுக்கெல்லாம் உட்கட்சி மோதல், கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத்தொடர்பு போன்ற பல காரணங்கள் கண்டறியப்பட்டது. அது போன்றுதான் பா.ஜ.கவின் பிரமூகர்களின் தொடர் படுகொலைகளும் காரணங்களாக அமைந்துள்ளது.

1). நாகப்பட்டிணத்தில் கடந்த 4.7.2013 அன்று பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர், சந்தோஷ் குமார், கார்த்திகேயன் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2). வேலூரில் கடந்த 23.10.2013 அன்று பா.ஜ.கவின் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் தான் படுகொலை செய்தார்கள் என்று கடையடைப்பு நடத்தினார்கள். பின் விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இப்படுகொலை நடந்தது என்று கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வசூல் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைபெருமாள், தரணி குமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

 3). ராமநாதபுரம் பரமக்குடியில் 19.3.2013 அன்று பா.ஜ.கவின் முன்னாள் கவுன்சிலர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். இதில் நான்கு நபர்கள் மனோகரன், ரபீக்ராஜா, சாகுல், ராஜா ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலை 6 ஏக்கர் நிலத்தகராறு தான் காரணம் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

4). ராமேஸ்வரத்தை சார்ந்த இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர் குட்டநம்பு என்பவர் 7.7.2013 அன்று கொலை செய்யப்பட்டார். காவல்துறையின் துரித நடவடிக்கையில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்த குற்றவாளிகளான ராமச்சந்திரன் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட அனைத்து படுகொலையும் முஸ்லிம்கள்தான் என்று ஃபாசிசவாதிகள் கூக்குரலிட்டனர். ஆனால் அவை அனைத்தும் சமூக விரோத செயல்பாடுகளான கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத் தொடர்பு போன்ற காரணங்களால் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2 comments:

Unknown said...

Muslim Naygala comedy'a pannurenga???????

Shahul said...

தமிழகம் காவல்துறைதான் இதை சொல்லியிருக்கு