Sep 7, 2013

நரேந்திர மோடி பாஜக.வின் பிரதம வேட்பாளராகிறார்!

செப் 08/2013: பிரதமர் கனவு காணவில்லை என்று குஜராத் முதல்வர்  நரேந்திர மோடி அடிக்கடி பீற்றி கொண்டாலும்  உள் கட்சியில் மூத்த தலைவர் அத்வானியை ஒதுக்கி தன்னை முன்னிறுத்தி  கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேரதல் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர்  ஆட்சேபம் தெரிவித்த போதிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நெருக்கடிக்கு அடிபணிந்து பாஜக கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் இந்த பதவியை மோடிக்கு தாரைவார்த்தார்.

மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., வி.ஹைச்.பி, பஜ்ரங்க்தல் போன்ற தீவிரவாத  அமைப்புகள் தொடர்ந்து   வலியுறுத்தின இந்தநிலையில் இத்தொடர் வலியுறுத்தல்களுக்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தயாராக இருப்பதாகவும், அடுத்த வாரம் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: பாஜக. கட்சி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கள்ள குழந்தை என்பதை உலகம் அறியும். இருந்தாலும் அறியாத சிலரும் இப்பொழுது அறிந்து கொள்ளும்படி தங்களது வேசத்தை கலைத்துள்ளனர்.
*மலர் விழி*