Sep 25, 2013

முஸ்லிம் மகளிர் அணியும் ஆடைகுள் ஒளியும் மோடி!

sep25:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பா.ஜ.க. சார்பில் “காரியகர்த்தா மகாகும்ப” நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முஸ்லிம் இனப்படு கொலை புகழ் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக பர்தா (முஸ்லிம் மகளிர் அணியும் ஆடை) வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நிதியுதவி அளித்துள்ளது.

இந்த மகாகும்ப நிகழ்ச்சியில் பங்கேற்கும் கட்சியினருக்காக 10 ஆயிரம் பர்தா வாங்க ஆளும் கட்சியான பா.ஜ.க. ஆர்டர் கொடுத்துள்ளது. இவற்றை தைத்துக் கொடுக்க ஜீனத் டெய்லர்ஸ் என்ற நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.

இதற்கான தையல் கூலியை “திலீப் பில்ட்கான்” என்ற ரியஸ் எஸ்டேட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவேந்திர ஜெயின், இந்தூருக்கு நேரில் வந்து தையல் கூலி முன்பணமாக ரூ. 42 லட்சத்தை ஜீனத் டெய்லர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.

மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பர்தா அணிந்த பெண்களை காண முடிகிறது. மோடியின் முஸ்லிம் எதிர்ப்பு இமேஜை மாற்ற, பணம் கொடுத்து பர்தா அணிய வைத்து பெண்களை அழைத்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன்பு ஜெய்ப்பூரில் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொப்பி மற்றும் பர்தாக்களை விநியோகித்து பயணச் செலவு, உணவு ஆகியன வழங்கியதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். முன்னர் செய்திகள் வெளியாகின.

No comments: