மலப்புரம் Aug 26: கேரளாவில் பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா நடத்திவரும் கிரீன் வேலி இஸ்லாமிய கல்விக்கூடம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல் துறை தடை விதித்திருந்தது. மஞ்சேரி பொது மருத்துவமனை அருகில் அவர்கள் ஒன்று கூடும் போது காவல்துறை தடுத்து நிறுத்தியது தலைவர்கள் சிறிதுநேரம் பேசிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கிரீன் வேலி பாப்புலர் பிரண்டின் பயிற்சிக்கூடம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதனை முற்றுகையிடவும் தீர்மானிக்க பட்டிருந்தது அதன்படி நேற்று முற்றுகையிட முயன்றபோது மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சேதுராமன் தடுத்து நிறுத்தினார்.
இவர்கள் முற்றுகை போரரட்டம் பற்றி முன்னதாக பாபுலர் பிரான்ட்டின் கேரளா மாநில தலைவர் கருத்து கூறுகையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள் அதில் கலந்து கொள்பவர்கள் தலைகளை எண்ணி கொண்டு வரட்டும் ஏன் என்றால் அவர்கள் திரும்பி போகும் பொது எல்லா தலைகளும் இருகிறதா என்று பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இவர்களது அணிவகுப்பு க்ரீன் வேலி சென்டரை அடையும் முன்னால் அவர்களை பாபுலர் பிரான்ட் இன் அணி எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment