ரக்ஷா பந்தன் விழா என்றால் சைட்டடிக்கும் இளைஞர்களை கலாய்ப்பதற்காக பெண்கள் கையில் கையிறு கட்டி அண்ணன்களாக்கி நோகடிப்பார்கள் என்ற அளவுதான் இங்கே அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களிலும் அவ்வாறே காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் ரக்ஷா பந்தன் விழா வடக்கில்தான் முதன்மையாக கொண்டாடப் படுகிறது. தெற்கில் இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் பிரபலமாக்க முயற்சிக்கிறது. அப்படி இந்த கயிறு கட்டலின் வரலாறு என்ன?
பெண்கள் தங்கள் மானம், உயிர், கற்பு, உடமை அனைத்திற்கும் தனது சகோதரனே காப்பு என்று கயிறு கட்டுவதுதான் இதன் வரலாற்று வழக்கம். பெண்களையே சாதி, இன, மத கௌரவமாக ஆணாதிக்க சமூக அமைப்பு வைத்திருக்கிறது. குழுச் சண்டையில் கூட எதிர்க்குழுவின் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதே பெரிய நடவடிக்கையாக இருக்கிறது. அப்படி எல்லா கௌரவங்களையும் சுமந்து திரியும் பெண்களது கற்பை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.
தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.
sinthikkavum: அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி(ராமர்), மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment