Mar 8, 2013

ஈழத்தமிழர்களுக்காக ஓரணியில் திரண்ட தமிழர் இயக்கங்கள்!

மார்ச் 09/2013: இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை நடத்த கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் கோவை மாவட்ட SDPI  (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் இயக்கங்கள்: இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா  தலைமை வகித்தார். மாநில செயலாளர் அபுதாகிர் கண்டன உரை ஆற்றினார். இதில் பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழ் புலிகள் தோழர் இளவேனில், ஆதி தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் கோவை ரவிக்குமார், திராவிடர் விடுதலை கழகம் தோழர் பன்னீர் செல்வம், தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்மணி, கொங்குநாடு அருந்ததியினர் முன்னேற்ற பேரவை தோழர் இளங்கோவன், சமத்துவ முன்னணி தோழர் மு. கார்க்கி, பொதுநல மாணவர் எழுச்சி தோழர் மு. பார்த்திபன், தலித் விடுதலை கட்சி மாநில செயலாளர் தோழர் களப்பிரார்.

மற்றும் நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் தோழர் பேரா. கல்யாண சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் அ. தென்னரசு, தமிழ் தேசிய வழக்கறிஞர் பேரவை தோழர் சி. முருகன், தமிழ் தேச புரட்சி இயக்கம் செய்தி தொடர்பாளர் தோழர் ப. சங்கர வடிவேலு, ஆதித்தமிழர் பேரவை மாநில நிதி செயலாளர் தோழர் நீலவேந்தன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர் மதுக்கரை கிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர் டி. சிவக்குமார் மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

என்றைக்கு ஒரு நல்ல விடிவு காலம் வருமோ!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

தமிழக கட்சிகள் அனைத்தும் தமது சுய நலன்களை மறந்து ஒன்று சேர்ந்தால் ஈழத்தமிழரின் துன்பம் மறையும் அவர்கள் இலட்சியம் நிச்சயம் வெல்லும்.