Apr 2, 2013

சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம்!

ஏப்ரல் 4:  ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸ குருமார்களுக்கு எதிராக ( 01.04.2013 ) இலங்கை துணை தூதரகம் முற்றுகை போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்றது. 

இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாப் அணிய தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது

அதன் தொடர்ச்சியாக இலங்கை கொலும்புவில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், சிங்கள வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவங்கள் நிறுவனத்தின் பொருத்தப்பட்டுள்ள பாதுக்காப்பு  கமெராவில் பதிவாகியுள்ளது. 


இதனை அறிந்த இலங்கை போலீசார் Fashion Bug நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த வீடியோ காட்சிகளை எந்த ஊடகத்திற்கும் வழங்க கூடாது என்றும், இணையத்தளங்களில் கூடாது என்றும் அச்சுறுத்தி உள்ளனர்., பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும் சொத்துக்களை சேதம் விளைவிக்கும் காட்சிகளும் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. முஸ்லீம்களை துடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் பௌத்த பயங்கரவாதிகளையும், தமிழர் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசாங்கத்தையும் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

No comments: