Apr 1, 2013

தலைநகரமா? காமக்கொடூரர்களின் கூடாரமா?

ஏப்ரல் 01/2013: 1)  டெல்லியில் ஓடும் காரில் 35 வயது பெண்ணுக்கு மூன்று வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 

2). டெல்லியில்  16 வயதுச் சிறுமி அவரது அண்டை வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காருக்குள் விடப்பட்டார். அந்த நபரை பின்னர் போலீசார் கைது செய்தனர்
  
இவை இன்றைய செய்திதாள்களில் வந்த செய்திகள்.
 -------------------------------------------------------------------------------------------------------------
சிந்திக்கவும்: டெல்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது. 
 
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் பெண் கற்பழிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது பாதுகாப்புகள் இரட்டிப்பாக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் டெல்லியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில்  இருமடங்கா உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். தலைநகர் டெல்லியில் இந்த வருடம் ஜனவரி to  மார்ச் வரை 359 கற்பழிப்பு வழக்குகளும், 794 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன. டெல்லி காமகொடூரர்களின் கூடாரமாக மாறிவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. 

*பெண்களுக்கு பாதுகாப்பில்லாததால்  இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து போனது*

இந்தியாவின் தலைநகரே காம கொடூரர்களின் கூடாரமாகி போனதே! தங்கள் நாட்டு பெண்களை கூட பாதுகாக்க முடியாத ஒரு நாட்டை வல்லரசு என்று சொல்ல முடியாது. அந்தோ பரிதாபம்! இந்தியா ஒளிரும் நம்புங்கள்

*மலர் விழி*  

1 comment:

Unknown said...

வெட்கம் உலகளவில்