மார்ச் 29: ஈழத்தமிழர் விசயமாக பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தைரியமான முதல்வர் யார்? கருணாநிதியா? அல்லது ஜெயலலிதாவா? என்று கேட்டால் ஜெயா என்று தைரியமாக சொல்லி விடலாம்.
முதல்வர் ஜெயலலிதா: கருணாநிதியின் புராணத்தை பாடப்புத்தகத்தில் இருந்து தூக்கியது, சங்கராசாரியார் கைது, விஸ்வரூபம் தடை, இலங்கை கிரிகெட் அணியை தமிழகத்தில் ஆட தடை, இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை கொண்டு வரவேண்டும் என்கிற தீர்மானம் போன்றவைகளை சொல்லலாம்.
xமுதல்வர் கருணாநிதி: தமிழ் இனத்தலைவர் என்று தன்னை சொல்லிக் கொண்ட கருணாநிதி 2009ம் ஆண்டு நடந்த இறுதி போரில், போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல், கனிமொழியை விடுதலை செய்வதிலேயே கவனம் செலுத்தி, போலி உண்ணாவிரதமும், கடித யுத்தமும் நடத்தினார். இதுபோதாதென்று இலங்கை இனப்படுகொலையை நிறுத்த சொல்லி தமிழகம் முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார்.
பாராட்டு: ஜெயலலிதாவை பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்ப காலம் முதல் ஈழ விடுதலை போராட்டத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா, மிகபெரிய இனப்படுகொலை நடந்தேறியதும் தனது ஈழ எதிர்ப்பு நிலைய மாற்றி (ஓட்டுக்காக இருந்தாலும் தப்பில்லை) பகிரங்கமாக தமிழக சட்ட சபையில் இந்தியாவை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவெற்றி இருப்பது ஜெயாவின் தைரியத்தை காட்டுகிறது. நிச்சயமாக கருணாநிதி ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்காது.
தீர்மானம்: இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் போன்ற விடயங்களை வலியிறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
*தமிழர் போராட்டங்கள் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்*
12 comments:
mmm ....
பஸ் மற்றும் மாவட்டம் பெயர் நீக்கியது 1999 கருணா நிதி ஆட்சியில் ஆகும்.ஜெயலலிதா இதை செய்ய வில்லை.
தமிழக மாவாட்டங்கள் மற்றும் பஸ்களுக்கு இருந்த ஜாதி பெயரை தூக்கியது திமுக ஆட்சியில்
இந்த ஊடகங்கள் எப்பொதும் ஜெயவுக்கு சப்பெ◌ாட்டுத்தான் தமிழக மாவாட்டங்கள் மற்றும் பஸ்களுக்கு இருந்த ஜாதி பெயரை தூக்கியது திமுக ஆட்சியில்
இதை ஜெய செயதாக போடுகின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
வர வர சிந்திக்கவும் .நெட் இன்னொரு தின மல[ம்]ர் போல செய்தி வெளியிகிறது ..
ya ya
தவறை சுட்டி கட்டியமைக்கு நன்றி... தவறுக்கு வருந்துகிறோம்.
கருத்து சொன்ன வாசகர்களுக்கும், தவறை சுட்டி காட்டிய வாசகர்களுக்கும் நன்றி. கருணாநிதியோடு ஒன்றும் விரோதம் இல்லை, ஜெயாவை தூக்கி பிடிக்க வேண்டிய அவசியமும் எமக்கில்லை. தமிழ், தமிழ் என்று சொல்லியே அரசியல் நடத்தியவர் கருணாநிதி. அவர் தமிழர்களுக்கு செய்த துரோகங்களை சுட்டிக்காட்டும் பொழுது ஒரு ஒப்புவமை தேவைபடுகிறது அதுவே ஜெயா....
கடந்த புதன்கிழமை ஜெயலலிதா சென்னை நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்தார். ஒரு முதலமைச்சர் தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் இது போல ஒருவரைச் சென்று சந்திப்பது வரவேற்கத்தகுந்த விஷயம். அது தினத்தந்தி அதிபர் என்பதால் இருந்தாலும் கூட. சசிகலாவைத் தவிர வேறு யாரின் நலனிலும் அக்கறை துளியும் இல்லாத ஜெயலலிதா இது போல நேரம் ஒதுக்கி உடல் நலிந்த ஒருவரைப் பார்ப்பது சிறப்பான விஷயமே. ஆனால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளைப் பார்ப்பது, அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியைப் பார்க்கையில், அதற்குண்டான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமா வேண்டாமா
இந்த செயதி ஏன் போடவில்லை ஏன் பயம்
நல்ல தமிழ் பற்றுடா....தேச துரோகம் பண்ணுவதுதான் தமிழ்பற்றா உங்களுக்கு....?
இந்தியாவுல, தமிழ்நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, அதை தீர்த்து வைக்க வக்கில்லை..
அயல் நாட்டு பிரச்சினையில இங்கே தீர்மானம் போட்டுட்டா ? தைரியமான முதல்வரா?
டாஸ்மாக் கிலேயே கிடந்து கிடந்து, தன்மான தமிழனின் மூளை மலுங்கிபோயிடுச்சு....
வாழ்க தேசதுரோக தமிழ்பற்று வியாபாரம்...
உங்கள் தேசபக்தியை கொண்டுபோயி சாக்கடையில், குப்பையில் போடுங்கள். யாருக்கு வேண்டும் உங்கள் தேசபக்தி. தேசம் .......எது தேசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படி ஒருதேசம் முதலில் இருந்ததா? இந்த எல்லைகளை உருவாக்கியது யார்? இந்தியா என்பது பல்வேறு பட்ட மொழி, மத, கலாச்சாரத்தின் கூட்டு அவ்வளவுதான்.
இதில் அந்த அந்த மொழி, கலாசார, மத மக்களுக்கு தேவையான உரிமைகளை பகிர்ந்து வழங்கி முறைப்படி ஆட்சியை நடத்துவார்கள் என்றே மத்திய நடுவண் அரசோடு மற்றைய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சேர்ந்து இருக்கிறது. அதை செய்யாமல் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் நாடும், மக்களும் வடஇந்திய ஹிந்தி ஆட்சியாளர்களுக்கு அடிமைபடுத்த வேண்டி, ஹிந்தி திணிப்பு முதல் உரிமைகள் மறுப்பு வரை பல்வேறு அடக்கு முறைகள் தமிழர்கள் மீது ஏவப்பட்டது.
அதன் தொடர்ச்சிதான் கூடங்குளம் அணு மின்நிலையம், தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்தமிழர்கள் படுகொலை இனி எங்களுக்கு இந்தியா தேவை இல்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே சொந்தம். போதுமா மர்மயோகி.
Post a Comment