Feb 16, 2013

அரசின் இழப்பீடு எங்களுக்கு தேவையில்லை!

பிப் 17/2013: மகராஷ்டிரா மாநிலம் கடலோர மாவட்டமான ரத்தனகிரி பகுதியில் உள்ள ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. 
இந்தத் திட்டத்தை எதிர்த்து ஜெய்தாபூர் மற்றும் அதனைத் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மகாராஷ்டிர அரசு அதிக நஷ்ட ஈடு தருவதாக அறிவித்தது. ஆனால், உள்ளூர் மக்களும், அமைப்புகளும் அரசின் இழப்பீடு எங்களுக்கு தேவையில்லை “நாங்கள் அணுவுலை வேண்டாம் என்றுதான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம் இழப்பீடுகளுக்காக அல்ல தெரிவித்தனர்.
இந்த அணு உலைத் திட்டம் விஷத்தைப் போன்றது.” என்று, ஜெய்தாபூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின்  தலைவர் பிரகாஷ் வக்தாரே தெரிவித்தார்.“ஜெய்தாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள் பணத்தை விரும்பவில்லை. அணு உலைத் திட்டத்தைத்தான் எதிர்க்கிறார்கள். 
திட்டத்தை எதிர்த்து அடுத்த மாதம் பேரணி நடத்தப்படும். ஊடகங்களில் சில அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அத்தைகய ஊடகங்கள் தான் கிராம மக்கள் அதிக இழப்பீடு கோரி போராடி வருவதாக பொய்யாக செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் ஒரு போதும் நாங்கள் கூடுதல் தொகை கேட்டு போராடவில்லை” என்று அவர் கூறினார்.
சிந்திக்கவும்:  ஜெய்தாபூர் மக்களின் போராட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள். அதுபோல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டமும் வலுபெற வேண்டும். தமிழர்கள் அனைவரும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒருமித்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 

1 comment: